பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. வெளிநாட்டு வாணிகம்: கி.மு. 1000-500 பாலஸ்தீனமும் இந்தியாவும் : கி.மு. பத்தாம் நூற்றாண்டில், ஷிபாவின் அரசி (Queen of Sheba) Frrguuog#1 g/rfg913 g5 (King of Solomon) “16)org, போலும், உணவுக்கு மனமுட்டும் பொருள்களின் மிகப்பெரிய குவியலையும், கிடைத்தற்கரிய மதிப்பு மிக்க இரத்தினக் கற்களையும் கொடுத்தாள். ஷிபா அரசிசாலமன் அரசனுக்குக் கொடுத்த, மணப்பொருளின் இக்குவியல் போலும் ஒரு மணப்பொருள்குவியல் மீண்டும் வரவே யில்லை." (1 Kings,x10). அந்நாட்களில், இப் பண்டங்கள், இந்தியாவிலிருந்துதான் மேற்கு நாடுகளுக்குச் சென்றன. இம்மணப்பொருள்களும் நவரத்தினங்களும், அரசியின் கைகளை அடைவதற்கு முன்னர், அவை இந்தியப் படகுகளில், ஆப்பிரிக்கக் கடற்கரையை அடைந்தன என உறுதியாகக் கூறலாம். "ஒப்ஹறியரிலிருந்து ஒப்ஹியர் (Ophir) பொன்னை ஏற்றி வந்த ஹிராம் (Hiram) கப்பல் படையும், அங்கிருந்து ஏராளமான அகில் மரங்களையும், நவரத்தினங்களையும் கொண்டுவந்தது. அரசன், அகில் மரம் கொண்டு, இறைவன் திருக்கோயில், அரசன் பெருங் கோயில்களுக்கான தூண்களையும், இசைவாணர்களுக்கு வில் யாழ், விரல் தெறித்து இசையெழுப்பும் நரப்புக் கருவிகளைச் செய்தான். அதன்பின்னர், அத்துணைப் பெருமளவிலான அகில் மரங்கள் இந்நாள் வரை வரவில்லை. காணப்படவும் இல்லை," ( Kings : x :11-12). இந்த அகில் மரங்கள், சந்தன மரங்களாக அடையாளம் காணப்பட்டன.