பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 தமிழர் வரலாறு இடங்களாக ஆக்குவதையும் அவன் செய்தான். (Scots Periplus, Page:160) - - கடலின் துழைவிடத்தில் இடம்பெற்ற டைரஸ் என்ற வாணிக நிலையத்தில், (Ezeki XVI.19) பளிச்சிடும் இரும்பு, தரம் தாழ்ந்த லவங்கப்பட்டை மருந்தாகப் பயன்படும் மணம் தரும் ஒருவகைப்புல் ஆகிய பொருள்கள் இருந்தன. இந்திய இரும்பைக் காய்ச்சிப் பக்குவப்படுத்துவது குறித்த, கிரேக்க நாட்டுத் தனி ஒப்பந்தம், பிற்காலத்தில் உருவாயிற்று என்கிறது, திருவாளர் வார்மிங்டனின், "இந்தியாவுக்கும், உரோமப் பேரரசுக்குமிடையிலான வாணிகம்" என்ற நூல்: ["Cotmmerce between the Roman Empire and India" by Warmington. page:258). பளிச்சிடும் இந்திய எஃகு, பழைய காலத்தில், பல்வேறு நாடுகளால், போர்வாட்கள் பண்ணுவதற்காக இறக்குமதி செய்யப்பட்டது. இலவங்கப்பட்டையின் பழைய பெயர் “காஸியா (Cassia) என்பதாம். நறுமணம் கமழும் ஒரு வகைப் புல்லின் பெயர் "கலமஸ்" (Calamus) என்பதாம். நறுமணப் பொருள்கள், ரத்தினக் கற்கள், பொன் ஆகிய பொருட்களைப் போலவே, இப்பொருட்களும் "oபா" (Sheba)அரசியாரின் வணிகர்களால் இந்தியாவிலிருந்து டயரளக்கு (Tyrus) எடுத்துச் செல்லப்பட்டன. (ஏழெகில் : j7 : 22) கி.மு. 704-681-இல் ஆட்சி புரிந்திருந்த சென்னசெரிப் (Sennacherib) என்ற அரசன், தினவே (Ninewch) என்ற நகரை விரிவுபடுத்தி, அதில் தனக்காக ஒர் அரண்மனையைக் கட்டி, ஓர் பெரிய மலர்த் தோட்டத்தையும் எழுப்பி, அத் தோட்டத்தில் ஏனைய மரங்களோடு, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்த, "ஆட்டுமயிர் விளையும் மரங்களையும்" (250 ஆண்டுகட்டுப் பிறகு, ஹிரோடோடஸ் (Herodotous) அவர்களால் பருத்திச் செடியைக் குறிக்க வழங்கப்பட்ட ஒரு Gigirl fr) Lou?& G). Lirair. [Journal of the Royal Asiatic Society. 1910 page: 403 Pinches.]