பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடக்கும் தெற்கும். கி. மு. 500 .... 1 வரை 105 லிருந்து உண்மையாகிறது. ஒரு சமஸ்கிருத இலக்கண ஆசிரியர் மரபே, தென்னிந்தியாவில் உருவாகிவிட்டது. பாணினி நளிைமிகச் சேயதான காந்தார நாட்டில், எழுதிய இலக்கண்த்தை அவர்கள் கற்றுத் தெரிந்தனர். அந்நூலின் பொருளுக்கு மேலும் விளக்கம் ஊட்டும் உரைகளை எழுதுமளவு தேர்ந்திருந்தனர் என்பதை உறுதி செய்ய இதுவே போதுமானது. - காத்யாயனர், ஒரு தென்னாட்டவராகவே, சமஸ்கிருத இலக்கியங்களில், "பாண்ட்ய', 'சொட', 'கெரள' என முறையே திரிந்து வழங்கப்படும் “பாண்டிய”, “சோழ”, “சேர” என்ற சொற்கள், பாணினியால் ஆராயப்படவில்லை என்பதை உணர்ந்து, அவற்றின் சொல் அமைப்பு குறித்து, விதிமுறைகளை வகுக்க முனைந்தார். "வழிவழி மரபில் வந்தவர் எனும் பொருள் உடையதான “அஞ்” என்ற விகுதி, ஒரு சொல்லின் ஈற்றில் வந்து, அவ்வாறு வருவதால் ஒரு நாட்டினைக் குறிப்பிடும் அதே நிலையில், சத்திரிய இனத்தைச் சேர்ந்த, ஓர் அரசமரபையும் குறிப்பிடும்” எனக் கூறும் ஒரு விதியினைப் பாணினி அவர்கள் இயற்றினார்கள், (ஜளபத சப்தாத் சத்திரியாத் 'அஞ்” (அஷ்டாத்யாயீ : 4 168)) இவ்விதி, போதுமான பொருள்விளக்கம் உடையதல்ல தாகவே, காத்தியாயனர், பல துணைவிதிகளை இணைத்தார்; அவற்றுள் மூன்றாவது விதி, "சத்திரிய அரச இனங்களையும், நாடுகளையும் ஒரு சேர உணர்த்தும் சொற்களைப் பொறுத்த மட்டில், அச்சொற்களை, அவற்றுள் அரசனை உணர்த்தவும் செய்யவேண்டுமாயின், "மகன்’ என்னும் பொருள் உணர்த்து வதான ஒரு விகுதி இணைக்கப்பட வேண்டும்” எனக் கூறுகிறது. (சத்திரிய சமான சப்தாஜ் ஜனபதாத்ஸ்ய ராஜ நியபத்யவத்" அவ்வகையில், பாஞ்சாலர்களின் அரசன் "பாஞ்சாலஹ்” எனவரும். இவ்விதியும், பாண்டிய என்ற சொல் தோன்றுவதற்கான விளக்கம் தரவல்லதாகாது. ஆகவே, “பாண்டு” என்ற சொல்லைப் பொறுத்தமட்டில், "ட்யன்" என்ற விகுதி ஆளப்படும். அவ்வகையில் பெறப்படும் சொல் “பாண்ட்ய” என்பதாம் எனக்கூறும் வேறு ஒரு விதியினைக், காத்யாயனர் வகுத்தார். (பாண்டொர் ட்யன் வக்தவ்யஹ்”