பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 16 தமிழர் வரலாறு

குப்புறத் தள்ளப்பட்டதோ, எப்பொழுது, உணர்ச்சிக்கு உள்ளாகி, ஒயாது துடித்துக் கொண்டிருக்கும் உயிர், மாறா நியதிகளாம், வலிய இரும்புச் சங்கிலிகொண்டு சிறை செய்யப்பட்டுவிட்டதோ, எப்பொழுது, புத்தர் கூறுவது போல, மனத்தொடுபடும் கோட்பாடு, கண்ணொடுபடும் கோட்பாட்டால் கெட்டு மங்கிப் போய்விட்டதோ, எப்பொழுது, சாங்கியர் கூறுவதுபோல், புத்தியின் "அத்யவசாயம்" மனத்தின் "சங்கல்பவிகல்ப”ங்களால், ஒளிகெட்டு மங்கிப் போய்விட்டதோ, அப்பொழுதே, ஜீனர், புத்தர்களின் போதனைகள் சமணமாகவும், பெளத்தமாகவும் தாழ்நிலை உற்றுவிட்டன. உற்றன; இந்திய மக்களுக்குப் பெருங்கேடாக, மனிதனின், தன்னை மட்டுமே மதிக்கும் அகவுணர்வு, மேலும், இரு சமயப் பிரிவுகளை உருவாக்கி விட்டது. அந்நிலையே பெளத்தர்களின் பேரவைகள் கூடலாயின; ஏனைய மக்களின் உயிர்களைக் காக்கும், சமயத்தின் பெயரால், வெறுப்புணர்ச்சியைத் துண்டும் வேட்கையால் உந்தப்பட்ட, புத்தத்துறவிகள், நாட்டை அலைக்கழிக்கத் தொடங்கிவிட்டனர். முந்திய தலைமுறை களைச் சேர்ந்த புத்த பிக்குகள் போல் அல்லாமல், போர்க் குணம் வாய்ந்த இப்புத்தத் துறவிகள் தங்கள் சமயப் பிரசாரத் திற்கு மகதப் பேரரசின் துணையையும் பயன் கொண்டனர். அசோகனும் தமிழ்நாடும் : ஆனால், அசோக வர்த்தனன் காலத்திலும், தமிழ்நாடு, மகத ஆட்சி எல்லைக்கு வெளியிலேயே இருந்துவந்துள்ளது. மக்களின் நோய் தீர்க்கவும், மாவினங்களின் நோய் தீர்க்கவும், அவன் நிறுவிய இரு நிறுவனங்கள் குறித்துப் பேசும், அவனுடைய இரண்டாவது பாறைக்கல்வெட்டில், சோழ, பாண்டிய, சத்திரிய புத்திர, மற்றும் கேரள புத்ரர்களை "அந்த" அதாவது அண்டை நாட்டவர் அல்லது எல்லைப் புறத்தில் உள்ளார், என்றே குறிப்பிட்டுள்ளான். அவனுடைய 13வது கல்வெட்டில், தெற்கில் தம்பண்ணி அதாவது தாம்பரபரணி வரையான சோழ பாண்டிய நாடுகளில் தர்ம