பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 தமிழர் வரலாறு ஆரியவர்த்தம் (அதாவது அது ஒரு பண்டைய மரபு) என்றும் இதனின் வேறுபட்ட நிலப்பரப்பை இரு பிறப்பாளர் வாழ் தற்குமட்டுமே உரியதான மிலேச்சம் என்றும் அழைத்தனர். ("தயொர் எவாந்தரொ கிர்யொர் ஆர்யவிர்த்தம் விதுர் புத்ஹாஹ் கிர்ஷ்னா ஸாரஸ்து சாரதி ம்ரிகொ யத்ர, ஸ்வப்ஹாவத்ஹா-எதானி த்விஜாதயொ தெஸானி" இவ்வகையில், இப்போது நாம் பெற்றிருக்கும் மனு ஸ்மிருதி இயற்றப்பட்ட காலத்திலும் (அது பிராமணர்கள், இந்தியா முழுமையும் வாழத் தொடங்கிய காலம்), தன் எல்லைக்குள் மட்டுமே ஆரியர்கள் வாழக்கூடிய தான, ஆரிய வர்த்தத்தின் எல்லை குறித்த பழங்கருத்து. அதன் பழமை காரணத்தால் அதிகாரம் வாய்ந்ததாகத் திரும்பத் திரும்பக் கூறப்பட்டு வந்துளது. முத்துகள் : வேதகாலத்தில் அலங்காரத்திற்காகப் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்ட பொருள், தென்கோடி விளைபெருளாம் முத்துக்குத் தென்னிந்தியாவையே வேண்டியிருந்தனர். ஆதலின், சமய காரணங்களுக்கு, முனிவர்கள் ஆரியர்களை ஆரிய வர்த்தத்திற்கு உள்ளாகவே வைத்திருந்த உண்மை நிலையிலுங்கூடப் பண்டைக் காலத்திலிருந்தே, ஆரியவர்த்தத் திற்கும், தக்கின பாதத்திற்கும் இடையில், மிகப் பெரிய வாணிகப் போக்குவரத்து இருந்திருக்க வேண்டும். முத்துகள், வேதகாலத்தில் பெரு வழக்கில் பயன்படுத்தப் படுவது பற்றிக் குறிப்பிடும் சில மந்திரங்களிலிருந்து ஒரு சில பகுதிகள் இதோ: "சவிதாவின் தேர், பன்னிற முத்துகளால் அணி செய்யப்பட்டது" ("அப்ஹீவிற்தம் க்ற்ஷனயிர் விஸ்வரூபம் ரதம்" (ரிக் வேதம் 1; 334) "தெய்வத் தேர்களின் அலங்காரம் முத்துகளால் அழகு செய்யப்பட்ட அரசுத் தேர்களின் அலங்காரம் போன்றது", அவற்றை ஈர்த்துச் சென்ற குதிரைகளும் முத்துகளால் ("க்ஹ் ஷனெப் ஹிரஸ்வன்") அழகு செய்யப்பட்டன" (ரிக் வேதம் : 68:11, குதிரைகள்தாமும் "க்ற்ஷனதஹ்" (ரிக் வேதம் : 1.126:4)