பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளிநாட்டு.... கி.மு. 600 முதல் கி.பி. 14 வரை 123 வரவிற்கு வழி செய்யப்பட்டது. வணிகச் சாத்து செல்லும், தங்கும் இடங்களுக்கும், குடிநீர்க் கிணறுகளுக்கும் வசதி செய்து தரப்பட்ட, பல்வேறு வழித்தடங்கள், கடலுக்கும், நைல் நதிக்கும் இடையே திறக்கப்பட்டன. அவ்வழித்தடங்கள் முடியும் இடங்களிலெல்லாம், துறைமுகங்கள் நிறுவப்பட்டுச் சுங்கவரி விதிக்கும் அரசு அலுவலர்களால் கண்காணிக் கப்பட்டன. தன் முந்தைய செல்வவளத்தையும் புகழையும், எகிப்து, ஓரளவு திரும்பப் பெற்றுவிட்டது. தால்மியின் நகர்வலத்தில் பிலெடெல்பஸ் நகரில் இந்திய மகளிர், இந்திய வேட்டை நாய்கள், இந்தியக் காக்கைகள், ஒட்டகங்கள் மீது ஏற்றப்பட்ட இந்திய மணப்பொருள்கள் காணப்பட்டன. கிரேக்க இடைத்தரகர்களும், நடுவர் இருவர் குழு ஆட்சிக்கு உட்பட்ட ரோமும் : - கிறித்துவ ஆண்டு பிறப்பதற்கு முந்திய 500 ஆண்டுகளில், ஐரோப்பாவுடனான இந்த இந்திய வணிகத்தில், கிரேக்கர்கள், பெரும் இடைத்தரகர்களாக இருந்தனர். உலகப் பெருநாடு களுக்கு இடையிலான, இந்த விரிவான வாணிகப் போக்குவரத்தின் ஒருவிளைவு, தென்னாட்டு வணிகப் பண்டங்களின் தமிழ்ப்பெயர்கள், கிரேக்கப் பழங்குடி யினரின் துய கிரேக்க எல்லெனெஸ் மொழியால் (Helenes) கடன் வாங்கப்பட்டன. திருவாளர்கள் ஸோப்ஹோக்கில்ஸ், (Sophocles) ojffisivGl Tl /ciTsiv (Aristophanes) gg5] Curtí எழுத்துக்களில், அவை இடம் பெறத் தொடங்கின. அவையாவன: தமிழ் அரிசியிலிருந்து "ஒரைஸ்" (Oryza) இலவங்கப்பட்டையாம் கருவாவிலிருந்து, “கர்பியொன்" (Karpion) தமிழ் இஞ்சிவேர், சமஸ்கிருத ஸ்ரிங்கிவொரா ama lagi gu (Sringivera) "&#36 QL @grrsiv" (Ziggiberos) வால்மிளகைக் குறிக்கும் தமிழ் திப்பிலியிலிருந்து "பெப்பெரி," (Peper). இது இப்போது, ஐரோப்பிய மொழிகளில், கருப்பு மிளகைக் குறிக்கவும் ஆகிவிட்டது. பண்டைக்காலத்தில் கோவை மாவட்டத்தில் தோண்டி எடுக்கப்பட்ட தமிழ் வைடுரியத்திலிருந்து பெரில்லோஸ்’ 9