பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 . . . . . . . . தமிழர் வரலாறு (Beryllos) இந்த நூற்றாண்டின் தொடக்க காலத்து உரோமானியர், அவர்களுடைய, பண்டைய எளிய வாழ்க்கை முறையையே கடைப்பிடித்தனர். பகட்டு வாழ்க்கையில் அவா கொண்டிலர். ஆகவே, நடுவர். இருவர் குழு (Consular) ஆட்சியின் தொடக்ககாலத்தில், இந்தியப் பண்டங்கள், உரோமாபுரியை அடையவில்லை. அந்நாட்களில், இந்தியா இறக்குமதி செய்தனவற்றில் உரோம நாணயம் இடம் பெறவில்லையாகவே, அக்காலை நடைபெற்ற சிறு வாணிகத்திலும், வாங்கிய பண்டங்கள், உரோம நாட்டுப் பணம் கொடுத்து வாங்கப்படவில்ல. பல நூறு ஆண்டு காலமாக இருந்துவந்த பழைய தடத்திலேயே வாணிகம் நடைபெற்றிருக்கக் கூடும். நடைபெற்றிருந்தது. ஆனால், நடுவர் இருவர் குழு ஆட்சியின் பிற்பகுதிவரை, உரோமஅரசு, கிழக்கு நோக்கி விரிவடையவில்லை. துணிவுமிக்க உரோம வணிகர்களுக்குப் பல்மைரா (Palmyra) தன்னுடைய கதவு களைத் திறக்கவில்லை. ஜூலியஸ் சீசரால், அலெக்ஸாண் டிரியா, கி.மு. 47இல், கைக்கொள்ளப்பட்டது என்றாலும், கடல் வாணிகம் அராபியப் படகுகளில், கடற்கொள்ளைக் காரர்களின் பிடியில் சிக்குண்டிருந்த கடற்கரையை ஒட்டிநடைபெற்று வந்தமையால், அக்காலை வாணிகம், சிறிய அளவில், நிலையற்ற தன்மையிலேயே நடைபெற்று வந்தது. அக்காலத்தில், ஐரோப்பாவுக்கு, இந்தியாவிலிருந்து. என்னென்ன ஏற்றுமதி செய்யப்பட்டாலும், அவை, பெரும்பாலும் உரோமுக்குச் செல்வதில்லை. கிரேக்கத்திற்கே Garcirpaar. J. R. A. S. 1904. page : 593 - 94. Sewell) ĝGairrorở ஸ்வெல் அவர் ஆட்சிக்காலத்து நாணயங்களில், இதுவரை ஒருசில நாணயங்கள்ே இந்தியாவில் கண்டெடுக்கப்பட்டன என்ற உண்மை நிலையை அடிப்படையாகக் கொண்டு எழுந்தனவாம். - “. . . . . . . . . . . இக்கால கட்டத்தின் இறுதியில், மத்திய தரைக்கடல் மக்கள் மீது அடுத்தடுத்துக் கொண்ட வெற்றியும், நடத்திய கொள்ளையும், உரோமப்பேரரசின் கருவூலத்திற்கு ஒப்புக்காட்ட இயலாப் பெருஞ்செல்வத்தைக் கொண்டு வந்து சேர்த்தன. கீழ்நாடுகளைச் சேர்ந்த, மதிப்புமிக்க வணிகப்