பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 - * தமிழர் வரலாறு இயல்பாக இருக்கும், அந்த அளவு அடைந்துவிட்ட, குறிப்பிடத்தக்க அப் பெருநிலையை நாம் கண்ணெதிராகக் காணக்கூடும். தொடக்க நாளிலிருந்தே, இந்தியப் பண்டங் களின் வருகைப் பெருக்கத்திற்குப் பேரரசின் பண்டங்களைக் கொடுத்துச் சரிஈடு செய்ய முடியாது போயிற்று. அதன் விளைவு பண்டங்களுக்குப் பதிலாக, உரோமானியர், சென்றால் திரும்பி வராத, அடித்த நாணயப் பணங்களை வெளியேற்றினர். (Warmington, Page:38 நாணயப் பனங்களை ஏற்றுமதி செய்வதில், தொடக்கத்தில் ஒரு மோசடி வெளிப்படையாகவே செய்ய முயலப்பட்டது. அகஸ்டஸ் நாணயத்திற்குப் பதிலாக, அவனுடைய தத்துப் பிள்ளை களாம், கையஸ் (Gaius) லூசியஸ் (Lucius) என்பார் உருவங்கள் பொறிக்கப்பட்ட பொன்னுக்குப் பதில் முற்றிலும் பொன் முலாம் பூசப்பட்ட நாணயங்கள் பெரும் எண்ணிக்கையில் இந்தியாவில் கைம்மாறின. உள்நாட்டு மக்கள், போலி நாணயங்களிலிருந்து, உண்மையான உரோம நாணயங்களை, இன்னமும் வேறு பிரித்து உணரமாட்டா, தென் இந்தியாவோடு நடத்தும் வாணிகத்திற்காகவே அத்தகைய நாணயங்கள், தனியாக அடிக்கப்பட்டனவாக எர்னஸ்ட் (Ernst) எண்ணுகிறார்" எனக் கூறுகிறார் திருவாளர் வார்மிங்டன் [Warmington p. 139]. ganrirdo, guóypřencir கூர்மதிவாய்ந்தவர் என்பதை உறுதி செய்து விட்டனர். காரணம், அற்பத்தனமான அச்சோதனை மீண்டும் முயலப்படவில்லை. இந்நூற்றாண்டு கால அளவில், மேலைநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வணிகப் பொருள்கள் யாவை? உயிர்வில்ங்குகளின் ஏற்றுமதி பண்டைக்காலத்து இந்தியர்கள், உயிர்விலங்குகளைக் கடல்வழியாகப் பர்ஷிய வளைகுடாவிற்கும், ஆப்பிரிக்கா விற்கும், சீனாவுக்கும் அனுப்பி வைத்தனர். இரண்டாம் தாலமியின் மயில்களையும், கிளிகளையும், அனுப்பி வைத்தமைக்கும் அவர்களே, பெரும்பாலும் பொறுப்பாவர். ஏதன்ஸுக்குச் செல்யூகஸ் (Seleucus) நன்கொடையாக