பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளிநாட்டு.... கி.மு. 600 முதல் கி.பி. 14 வரை 129 எஞ்சிய இறைச்சியைக் கானவர் கொண்டு செல்வர்" என்ற நற்றிணை, விளக்கமாகக் கூறியுளது : - "போகிய நாகப் போக்கரும் கவலைச் சிறுகண் பன்றிப் பெருஞ்சின ஒறுத்தல் - சேறாடு இரும்புறம் நீறொடு சிவன, வெள்பசிப் படீஇயர், மொய்த்த வன்பு அழிஇக் கோனாய் கொண்ட கொள்ளைக் கானவர் பெயர்க்கும் சிறுகுடி, - நற்றிணை : 82 : 6-11. வேட்டுவர், காட்டில் வாழ்பவராகவும், விரைந்தோடும் மான் கூட்டத்தையும், துரத்தித் தொலைக்க வல்ல விரை வினையுடைய கடுஞ்சின நாய்களை உடையவராகவும் கூறப்பட்டு உள்ளனர். "கானுறை வாழ்க்கைக் கத நாய் வேட்டுவன்" (புறநானூறு : 33 : 1) "மான்கணம் தொலைச்சிய கடுவிசைக் கத நாய்.வேட்டுவன்". (புறம் : 205 : 8.9). வேட்டைக்குச் சென்ற தலைவன், வேட்டை முடிவுற்றதும், வேட்டை மேற்கொண்டு மூங்கிற்காட்டினுள் நுழைந்து பரவிக் கிடக்கும் தன் வேட்டுவத் துணைவர்களையும் வேட்டை நாய்களையும், வேட்டை முடிவுற்றது, வாருங்கள் என அழைக்கும் குறிப்போடு, கொம்பு எனும் ஊது கருவியை ஊதி ஒலி எழுப்புவன் : - - - "ஊதல் வேண்டுமால் சிறிதே, வேட்டொடு வேய்பயில் அழுவத்துப் பிரிந்ததின் நாய் பயிர் குறிநிலை கொண்ட கோடே" . - அகம் : 318 :13-15. முந்தைய நூற்றாண்டுகளில் தொடங்கப்பட்டுவிட்ட கிளிகள், மயில்களின் ஏற்றுமதி இந்த நூற்றாண்டிலும் தொடர்ந்தது. அதில் ஐயமில்லை, கிரேக்கர்களால் அஸ்பிஸ்' (Aspis) என அழைக்கப்படும் நாகப்பாம்புகள், மலைப்பாம்பு