பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளிநாட்டு.... கி.மு. 600 முதல் கி.பி. 14 வரை 135 "மாசு போகக் கழுவப்பட்ட அழகிய நீலமணி போலும் நிறம் வாய்ந்த, வானுற உயர்ந்த கருடக்கொடி உடைய, என்றும் வெற்றியே விரும்புவோன்" என்றும், அவர்கள் முறையே பாராட்டப் பெற்றுள்ளனர். "கடல்வளர் புரிவளை புரையும் மேனி, அடல்வெம் நாஞ்சில் பனைக்கொடி யோனும், மண்ணுறு திருமணி புரையும் மேனி, விண்உயர் புட்கொடி விறல்வெய் யோனும்." --- . - புறநானூறு : 56 : 3 - 6. "பால்போலும் வெண்ணிறம் வாய்ந்தவன்; பனைக் கொடியுடையான்” என்றும், "நீலமணியின் நிறம் வாய்ந்த திருமேனியுடையான், ஆரியப்படையுடையான்" என்றும் அவர்கள் மேலும் பாராட்டப் பெற்றுள்ளனர். "பால் நிற உருவின் பனைக்கொடி யோனும், நீல்நிற உருவின் நேமி யோனும்" .

. - புறநானூறு : 58 : 14 - 15.

இவ்விருவர்களின் மேனி நிறங்களுக்கிடையிலான மாறுபாடு, உவமை அணிகளாகப் பரவலாக ஆளப் பட்டுளது. எடுத்துக்காட்டுக்கு : “மாயோன் அன்ன மால் வரைக் கவாஅன்; வாலியோன் அன்ன வயங்குவெள் ளருவி, (நற்றிணை : 32:1-2). இராமாவதாரம் தவிர்த்து, திருமாலின் அவதாரங்களில், வேறு எதுவும் பழந்தமிழ் இலக்கியங்களால் குறிப்பிடப்படவில்லையாதலின், இவ்விருவரும், தென் இந்தியாவில், திருமாலின் அவதாரங்களாக அறிமுகம் ஆனவரல்லர்). பலதேவன், எப்போதும் பனஞ்சாறு பருகி வெறிகொண்டு கிட்ப்பன். பனைமலிந்த பகுதியில், அவன் வளர்ச்சிக்கு அது பொருந்தும், பனை, கங்கை வெளியில் வளர்வதில்லையாகவே, பலதேவ வழிபாடு கங்கைக் கரையில் உருவாகியிருத்தல் இயலாது. கடலுக்கு வெகு தொலைவில் அல்லாத, தென்னாட்டு ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியிலே யே அவ்வழிபாட்டுமுறை தோன்றியிருக்க வேண்டும்.