பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 - தமிழர் வரலாறு குடிபெயர்ச்சியின் தொடக்கத்திற்கு வழிவகுத்தது. படைத்துணைத்தலைவர், திருவாளர் கெரினி (Gerine) அவர்கள், கிறித்துவ ஆண்டு தொடக்கத்திற்குப் பல, நூற்றாண்டுகளுக்கு முன்பே, வடஇந்தியாவிலிருந்தும், தென் இந்தியாவிலிருந்தும், வணிகர்களும் புதிது காணும் உள்ளஆர்வம் மிக்கவர்களுமான இப்பெரும் வெள்ளம், இந்தோ சீனாவுள் பாயத் தொடங்கி, நிலவழியாகப் பர்மா மூலம், அத்தீவகற்பத்தின் வடபகுதியையும், கடல்வழியாக, அதன் தென் கடற்பகுதியையும் அடைந்து, ஆங்கே, தங்கள் குடியிருப்புகளையும், வணிகநிலையங்களையும் நிறுவின" என்று கூறியுள்ளார். (J. R. A. S. 1904, p. 234-37) பழைய இந்தியர்களின் இந்நடமாட்டம் குறித்த விரிவான விளக்கத்திற்கு, மேலே கூறியதைக் காண்க) பிராமணர்களும் பெளத்தர்களுமாகிய ஆரியர், பண்டைய இந்திய நாகரிகத்தையும், தமிழர், வாணிகத்தையும் இங்குக் கொண்டு சென்றனர். சுவர்ண பூமியின் எல்லைக்கு அப்பால், பண்டைக்காலத்தில் பெரிய வணிக மையமாக விளங்கிய மார்தபன் (Martabar) எனும் இடத்திற்கு அணித்தாகத் "தக்கோலம்" என்ற இடத்தை, மிலிந்தா பன்ஹ (Milindapanha) குறிப்பிடுகிறது. அவ்விடத்தின் பெயர், சென்னைக்கு அணித்தாகக் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் ஒரு பெரிய போர் நடைபெற்ற தக்கோலம் என்ற ஊரின் பெயரை நினை ஆட்டுவதாக உளது. - . சீனாவின் ஆன் மரபுப் பேரரசர் (Han Emperor) ஹ-தி (Wo-t) என்பான், இன்றைய துருக்கர்களின் முன்னோர் களாகிய ஹியுங்ாது (Hiung-Nu) என்பாரைக் கோபி (Gob) பாலைவனத்திற்கு அப்பால் துரத்திவிட்டான். அதன்பின்னர், ஐரோப்பாவுடனான சீனப் பட்டுவாணிகம், பெரிய அளவினை எட்டிவிட்டது. இவ்வாணிகம் மேற்கொண்ட வழிகளில் ஒன்று, சூயஸ் வளைகுடாவிலிருந்து வந்த யவன வணிகர்கள், சீனப்பட்டைத் தமிழ் இடைத்தரகர் களிடமிருந்து பெற்றுக்கொள்ளும், தமிழ்நாட்டுக் கடற்கரையை ஒட்டிய வழியாம். பர்மா, மலேயா, சீனக்