பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி. பி. முதல் ஐந்நூறு. வாணிகம் 14] லாம்ப்ஸாகோஸ் (Lampsacos) எனும் இடத்தில் கண்டெடுக் கப்பட்ட ஒரு வட்டத் தட்டில், ஒரு கிளி, வெள்ளைப் புள்ளிகளைக் கொண்ட சாம்பல்நிற ஒரு காட்டுக் கோழி, ஒரு புலி, ஒரு சிறுத்தை அனுமான் குரங்குகள் புடைசூழ நிற்கும் ஒரு பெண்ணாக, இந்தியா உருவகம் செய்யப்பட்டுளது. இவற்றில், காட்டுக்கோழி, உண்மையில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்ததுதான் (Warmington Page:147). பிற அனைத்தும் இந்திய இனங்களே. கிளாடியஸ், காட்சிப் பொருளாகக் காட்டிய இந்தியப் புலிகளின் நான்கு வகை மாதிரிவடிவங்கள், பெரிய கருத்துருவைத் தோற்றுவித்து விட்டன. கேலினஸ் (Gallienws) நினைவாக எழுப்பிய வளைவுக்கு அருகில் காணப்பட்ட, பல் வண்ணப் பட்டையொட்டு வழுவழுப்பான பகுதியில், தங்கள் விலங்கிரையைத் தின்னும் நான்கு புலிகளின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. பெட்ரோனியஸ் (Petroniws) அவர்கள் நூலின் ஒரு பகுதி, நீரோவின் ஆட்சின்போது, பொன்கம்பிகள் கொண்டு காப்புச் செய்யப்பட்ட கூண்டில் இட்டுத் துாக்கிச் செல்லப்பட்டு, அகப்பட்டுக் கொண்ட மனிதர்களின் குருதியால் தெவிட்டுமளவு ஊட்டப்பட்ட ஒரு L4 c5) 60 uudi (5 gólů LPG) 5 p g (Warmington Page : 148). டொமிடியன் (Domitian) அவர்களால் மேலும் பல காட்டப்பட்டுள்ளன. உரோமப் பேரரசுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட பிற இந்திய விலங்குகள், எருமையும், யானையும், ஆம். கொல்லப்பட்ட யானைகள் பல கொண்டோனாகிய அகஸ்டஸ் காலத்தில் உரோமில், வெள்ளை யானை தனிக் கவர்ச்சி உடையதாய் இருந்தது. அப்பேரரசின் ஆட்சியில், பேரரசர்களின் தேர்களை ஈர்த்துச் செல்ல யானைகள் பயன் படுத்தப்பட்டன (Warmington Page : 152), - கிளிகளின் பல்வேறு வகைகள், உரோமானிய மகளிரின், அன்பிற்குரிய கூண்டுப் பறவைகளாயின. விலை உயர்ந்த மாணிக்கக் கற்கள் மீது பெருமளவில் செதுக்கப்பட்டன. "அகஸ்டஸ் காலத்தில், அவை பிரம்புக் கூண்டுகளில் வைக்கப்பட்டன. ஆனால் மார்த்தியால் (Martial), sibCl is usiv