பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 - தமிழர் வரலாறு চান விடப்படும் மரங்களாம் எழு, சீப்பு, 21) கதவுக்குக் குறுக்கே பாய்ச்சப்படும் கணைய மரம், 22) ஏவுகணைகள், 23) குந்தம், 24) வேல், "வளைவிற் பொறியும், கருவிரல் ஊகமும், கல் உமிழ் கவனும், பரிவுறு வெந்நெயும், பாகடு குழிசியும், - காய்பொன் உலையும், கல் இடு கூடையும், தூண்டிலும், தொடக்கும் ஆண்தலைப் புள்ளும், கவையும், கழுவும், புதையும் புழையும், ஐயவித் துலாமும், கைபெயர் ஊசியும், சென்றெறி சிரலும், பன்றியும், பணையும், எழுவும் சீப்பும், முழுவிறல் கணையமும், கோலும், குந்தமும், வேலும், பிறவும்". - சிலப்பதிகாரம் : 5 : 207 - 217. சீவக சிந்தாமணி சில நூறு ஆண்டுகள் கழித்து எழுதப்பட்ட நூலாயினும், அவற்றின் சில பாக்கள் ஈங்கு எடுத்துக் காட்டும் தகுதியுடையவாம். அதில் கூறப்பட்டி ருக்கும் படைப் பொறிகாளவன, நூற்றுவரைக் கொல்லி, பகை வீரர்களைத் துாக்கி எறியும் பொறி, காணத் தெரியும் பேய்ப்பொறி, யானைப்பொறி, பாம்புப்பொறி, கூற்றுநிகர் கழுகுப்பொறி, சங்கிலிப்பொறி, குந்தம், புலிப்பொறி, விற்பொறிகள், கொடிய குதிரைப்பொறி, பகைவரைத் தொடர்ந்து சென்று வெட்டும் வாள், கல் உமிழ் கவண்கள், பாவை உருவிலான பொறிகள், செந்திப்பொறிகள், செந்தழல் கொப்புளிக்க, கொல்லன் காய்ச்சிய இருப்புக் குண்டுகள், கொக்குப் பொறி, கூகைப் பொறி, தலை நெருக்குத் துலம், உருக்கிய செப்பு, உருக்கிய இரும்புக் கொதிக்கும் எண்ணெய் இவைகளை வாரி இறைக்குப் பொறிகள், அம்பு, வேல், கற்களைத் தாமே ஏவும் பொறிகள், பன்றிப்பொறி, பாம்புப் பொறி, தானே இயங்கும் தேர்ப்படை, குரங்குப்பொறி