பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி. பி. முதல் ஐந்நூறு. வாணிகம் 159 ஆட்டுப்பொறி, கழுத்துறுக்கும் கயறு ஆகிய இவை, யவனர்களின் பொறியியல் அறிவு துணை கொண்டு பண்ணப்பட்டன என்கின்றன. அப்பாக்கள்; "மற்றவர் மற்ப்படை மலைந்து மதில் பற்றின் நூற்றவரைக் கொல்லியொடு, தூக்கு எறி பொறியும், தோற்றமுறு பேய், களிறு, துற்று பெரும் பாம்பும் கூற்றமன கழுகு, தொடர் குந்தமொடு கோண்மா", "விற்பொறிகள், செய்ய விடுகுதிரை, தொடர் அயில்வாள், கற்பொறிகள், பாவையன, மாடம் அடு செந்தீக் கொற்புனை செய் கொள்ளி பெரும் கொக்கு எழில் - செய்கூகை நற்றலைகள் திருக்கும் வலிநெருக்கு மரநிலயே". "செம்புருகு வெங்களிகள் உமிழ்வ, திரிந்த எங்கும் வெம்புருகு வட்டுமிழ்வ வெந்நெய் முகந்து உமிழ்வ, வம்புமிழ்வ, வேல் உமிழ்வ, கல் உமிழ்வ வாகித் தம்புலங்களால் யவனர் தாள் படுத்த பொறியே". "கரும்பொன் இயல் பன்றி, கதநாகம், விடுசகடம், குரங்கு, பொருதகளினொடு, கூர்ந்து அரிவ நுண்நூல் பரந்த பசும்பொற்கொடி, பதாகையொடு கொதிக்கும், திருந்து மதில் தெவ்வர் தலை பனிப்பத் திருந்தின்றே". - - சீவக சிந்தாமணி : 10 -104. யவனப் போர்ப் பொறியாளர்கள் மட்டுமல்லாமல், யவனக் கைவினைஞர் பலரும் தமிழ்நாட்டில் குடி வாழ்ந்திருந்தனர். யவனத் தச்சரின் உரோமக் கைவினைஞர் வேலைப்பாடு பழந்தமிழ் இலக்கியங்களில் பரவலாகப் பாராட்டப்பட்டுளது. யவனர் இயற்றிய பாவை விளக்கின் நலம் ஊரிடத்தில் பாராட்டப்பட்டுளது. , x