பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி. பி. முதல் ஐந்நூறு... வாணிகம் 16] பதைவிட அதிகமாக அளித்துள்ளார். தென்னாடு பற்றிய தம்முடைய அறிவினை, அவர், தென்னாடு சென்று வாழ்ந்திருந்தவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். தென்னிந்தியா, வழி வழி சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவேந்தரிடையே மட்டுமல்லாமல், வேறு, எண்ணற்ற குறுநிலத்தலைவர்களுக்குகிடையேயும், பங்கிடப்பட்டுக் கிடந்தது; அம்முவேந்தர்களும், ஏறத்தாழ, ஒத்த நிலை யினராகவே இருந்தனர். கரிகாலனைப் போலும் சோழ அரசர்கள், தென்னிந்தியா முழுமைக்கும் தாமே ஒப்பற்ற பேரரசர் எனக் கூறிக்கொள்ளும் நிலமை அதுவரை தொடங்கப்படவில்லை என்பது, அவருடைய மதிப்பீட்டி லிருந்து நம் மனதில் இடம்பெறும் பொதுவான கருத்து களாம். தாலமியின் கருத்துப்படி, சோழர்கள், ஒரளவு நாடோடிகளாவர். அவர்களுடைய தலைநகர், ஆர்க்காடாக இருக்குமோ என எண்ணத்தகும் நிலையினராகிய அவர்களுடைய பெயர், "சொரைடே" (Sorietae) "சொரிங்கோய்" (Soringo) "சொரே" (Sorae) என்பதிலும், உரையூரின் மற்றொரு பெயராம் உறந்தை என்பதின் திரிபாம் "ஒரத்தொரா" (Orthora) வைத் தலைநகராகக் கொண்ட, இனப்பெயராம் என மதிக்கத்தக்க "சொர்நாஸ்" (Somas) என்பதிலும் மறைந்துளது. தாலமி-காலத்தில், பாண்டியர் களும், குறிப்பிட்ட ஒரு சிறு எல்லைக்குள்ளாகவே இருந்தனர் (Warmington Page : 114 - 115). @gi sacrGp, epcirpi -eiger இனங்களில் எந்த ஓர் அரச இனமும், ஏனைய அரச இனங்கள் மீது பேரரசு உரிமை கொள்ளும் காலம் இன்னமும் உருவாகவில்லை என்பதைத் தன்னளவிலேயே உணர்த்து வதாகும். மேலும் வடஇந்தியா பற்றி ஆராயும்போது பரவலாக, "இந்தோ-சித்தியா" (Indo- Scythia) "அபிரியா" (Ahia) "அர்சா" (Arsa) என்பன போலும் அரசுகள் பற்றியே பேசும் தாலமி, தென்னிந்தியா பற்றிய செய்திகளில், "ஐஒயி" (Aio) “g@g@us" (Kareo) “Lairią Gum@srmu?" (Pandiono) "சொரெடொயி" (Soretoi) "பட்டோயி” (Batoi) "அருவர்னொயி" (Arwarno) "தொரிங்கோயி" (Thoringo). என்பன போலும் பழங்குடியினர் பற்றியே பேசுகிறார். இது,