பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 - தமிழர் வரலாறு கரிகாலன் மற்றும் நெடுஞ்செழியன் காலங்களைப் போல, அரசர்களின் ஆட்சித்திறன் உறுதி செய்யப்படவில்லை என்பதையே உணர்த்துகிறது. வடக்கிலிருந்து வரிசைப்படுத்துங்கால் இடம்பெறும் முதல் தமிழ்நாட்டின் பெயரை, "லிமிரிக்கே" (Limyrice) அல்லது "டிமிரிக்கே" (Dymirike) என, அவர் அழைக்கிறார். இப்பெயர், தமிழகம் முழுமையும் குறிப்பதாகத் தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால், பெரிபுளுஸ், தாலமி ஆகிய இரு ஆசிரியர்களுமே, சேர நாட்டை மட்டும் குறிக்கும் பெயராகவே, அதைக் கொண்டுள்ளனர். அதற்கு வடக்கே உள்ள நாடு, அவர்கள் கருத்துப்படி, பழந்தமிழ் இலக்கியங் களின் பல்வேறு இடங்களிலும், மராத்தியர் என்ற வரையறுக்கப்பட்ட பொருள் நிலையில் வரும் ஆரியர்க்கு உரித்தான "அரியகே" (Ariake) என்ற நாடு ஆகும். தமிழர்களுக்கு உரியதான "டிமிரிகே" (Dymirike) என்ற பெயர், ஆரிய நாட்டை அடுத்திருக்கும் தமிழ் மாநிலத்தை, அதாவது சேர நாட்டைக் குறிப்பதாக, வெளி நாட்டு வணிகர்களால், மேலெழுந்தவாரியாக, எடுத்துக் கொள்ளப்பட்டது. தாலமி குறிப்பிடும் இனங்களில் பெரும்பாலானவை அடையாளம் கண்டு கொள்ளக் கூடியனவே, "ஐயோயி" (Aioi) எனப் படுவார், ஆயர் ஆவர், "காரஒஇ" (Kareo) எனப்படுவார், கரையர் ஆவர். "பண்டியோநோயி" (Pandinoui) எனப் படுவார், பாண்டியர் ஆவர். "சொரெடோயி" (Soreto) யும், அதைத் தொடர்ந்து வருவனவும் சோழர் ஆவர். “படோயி" (Batoi) எனப்படுவார், தென்கிழக்குக் கடற்கரையைச் சேர்ந்த பரதவர் ஆவர். "அருவர்னோயி" (Arwarno) எனப்படுவார், கிழக்குக்கரை மாவட்டங்களாம், தென்னார்க்காடு, செங் கற்பட்டு, வடார்க்காடு மற்றும் நெல்லூர் மாவட்டங்களைக் கொண்டு அருவா நாட்டினராக அருவாளர் ஆவர். "சொரெடோயி" (Soreto) என்பதன் மற்றொரு பெயராகத் தாலமி அவர்கள் குறிப்பிடும் "தொரிங்கோயி" (Thoringo) என்பது சோழர் அல்லது சோழியர் என்பதன் திரிபுச் சொல்லாம். "டிமிரிக்கே" (Dymirike) "பண்டியோநோயி" (Pandiono) “GFrG)gG fro" (Soreto)“. DG aus Gertru?"