பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி. பி. முதல் ஐந்நூறு. வாணிகம் - | 65 கிடமிருந்து, அல்லது, அப்பிராமணர்கள் அறிவுரைப்படி வந்த வணிகர்களிடமிருந்து, காவிரி பற்றிய செய்தியைத், தாலமி அறிந்திருக்க வேண்டும். தென்னிந்தியாவில் அவர் குறிப்பிடும் ஆறு "டைரே" (Tyre) என்பதாம். கிரேக்க மொழியில் பகரத்திற்குப் பதில் மகரம் இடம் பெற்றுவிடுவது எளிதில் நிகழ்ந்துவிடும் பிழையாகும் ஆதலின் இது, பெண்ணையாறு என்பதன் வழக்காம் "பென்னெர்' என்பதன் திரிபே ஆகும். கடற்கரையிலும், உள்நாட்டிலும் இருந்த, பல நகரங்கள் பல வணிக நிலையங்களின் பெயர்கள், தாலமியால் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றின் இடங்களை அடையாளம் காண்பதில் ஏராளமான, தவறான கற்பனைக் கருத்துக்களெல்லாம் செலவழிக்கப்பட்டன என்றாலும், அம்முயற்சி அனைத்தும் பயனில என்பது உறுதியாகி விட்டது. . நீரோவின் இறப்பிற்குப் பின்னர் உரோம வாணிகம் : அரியணை உரிமை குறித்து ஏற்பட்டுவிட்ட பகைமை, அது தொடர்ந்து ஏற்பட்டுவிட்ட உள்நாட்டுப் போர்கள் காரணத்தால், நீரோவின் இறப்பிற்குப் பிறகு, நவரத்தினங்கள், நனிமிகு, நேர்த்தியான மென்துணிகளிலான வாணிகம் குறையத் தொடங்கிவிட்டது. வெஸ்பாஸியன் (Uespasion) பேரரசன் ஆனதும், தேவைக்கு மேலிருந்த உயர் நாணயங்களைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை வெளி யிட்டான். ஆடம்பர வாழ்வின் இடத்தைத் தன்னல மறுப்பு நிலை கைப்பற்றிக் கொண்டது. என்றாலும், இந்திய வாணிகம் அடியோடு அழிந்துவிடவில்லை, உரோமப் பேரரசின் புகழ் குன்றத் தொடங்கிய காலத்தைச் சேர்ந்த உரோம நாணயங்கள், தென்னிந்தியாவில் காணப் படாமையால், தமிழர், உரோமானியரோடு நடத்திய வாணிகம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டில், அடியோடு அழிந்துவிட்டதாகச் சில ஆசிரியர்கள் கற்பனை செய் துள்ளனர். மிளகு, பருத்தி நூல் இவைகளிலான வாணிகம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஆகவே, நிலைமை அவ்வாறு ஆகிவிடவில்லை. கி. பி. 408 இல் "அலரிக்" (Alaric), உரோம்