பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. காஞ்சீபுர மாவட்டம் காஞ்சீபுர நகரம் : கி. மு. 200 அளவில் வாழ்ந்திருந்த பதஞ்சலி, தமிழ்நாட்டில் உள்ள "காஞ்சீபுர" என்ற ஒரு நகரின் பெயரை மட்டும் எடுத்துக் கொண்டு, அந்நகரைக் குறிக்கும் சொல்லிலிருந்து, அந்நகரைச் சேர்ந்த ஒருவனைக் குறிக்கும் "காஞ்சீபுரக" என்ற பெயர்ச்சொல் தோன்றுவதற்கான இலக்கண விதிமுறைகளை விளக்கியுள்ளார். (வார்த்த பாஷ்யம் : 1.6 : on1 ஆண் : 4 : 11 : 1.04) ஒரு வட இந்தியராகிய பதஞ்சலி, "உரகபுரக" (உறையூரைச் சேர்ந்தவர்) "மதுராபுரக" (மதுரையைச் சேர்ந்தவர்) என்ற சொற்களுக்கு அல்லாமல், "காஞ்சீபுரக" என்ற சொல்லின் தோற்றத்தை விளக்குவது தேவை என ஏன் எண்ணினார்? பிற்கூறிய இரு சொற்களும் சமஸ்கிருத இலக்கியங்களில், தங்களை நிலை பெறச் செய்து கொள்ளவில்லை; ஆனால், காஞ்சீபுரத்திலிருந்து வருபவர்கள், வட இந்தியக் கல்வியாளர்களுக்கு நன்கு தெரிந்திருந்தனர் என்பதை, அவர் மிகத் தெளிவாகக் கருத்தில் கொண்டார். வட இந்தியாவுக்கும், சோழ பாண்டிய நாடு களுக்கும் இடையில், வாணிகத் தொடர்பு இருந்தது என்பது உண்மை; ஆனால், காஞ்சீபுரத்திற்கும், பாடலிபுத்திரத்திற்கும் இடையில் இருந்த, அறிவாளர்களுக்கிடையிலான தொடர்பு போலும் தொடர்பு எதுவும், தெரிந்தவரையில் இல்லை. அந்நாட்களில், சமஸ்கிருத நாகரிகத்தின் தென்கோடி எல்லை காஞ்சீபுரம். "காஞ்சீபுர" என்பது, ஒரு சமஸ்கிருதச் சொல்; அந்நகர் தமிழ்நாட்டில் இடம் பெற்றிருந்தாலும், அதற்குத் தமிழ்ப்பெயர் இல்லை. "கச்சி" என்ற பெயர், கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த, இளந்திரையன் புகழ்பாடும் பெரும்பாணாற்றுப்படையில் இடம் பெற்றுளது.