பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 - தமிழர் வரலாறு அரசனால் பார்வையிடப்பட்டுத் தன்னுடைய ஆணையாக அறிவிக்கப்பட்டுத் தாரைவார்த்தல் தொடர வழங்கப்பட்டது. இப்பழைய பல்லவர்களின் காலத்தில், பிராமணர்கள், காஞ்சீபுரம் மாவட்டத்து அக்ரஹாரங்களில் குடி வாழ்ந்திருந்தனர். அப்பட்டயங்கள் உறுதி செய்வது போல், சமயச் சார்பற்ற அலுவலகங்களில் வேலைக்கு அமர்த்தப் பட்டனர். முழுக்க முழுக்க ஆரியப் பழக்க வழக்கங்களான இவை அனைத்தும், தமிழ் நாட்டின் மையப்பகுதிக்குக் கி. பி. ஆறாம் நூற்றாண்டில், ஆரிய மயமாக்கப்படும்வரை, தெரியவே தெரியா. சிவகந்தவம்மனுடைய பட்டயங்கள், ஆந்திர அரசர்களின் நாஸிக் கல்வெட்டுக்களைப் போலவே, இலக்கிய ப் பாலிமொழியிலிருந்து பல்லாற்றினும், வேறுபட்டுப் பிராகிருத மொழியில் அமைந்துள்ளன. இம்மொழி, காஞ்சியில், மதிக்கத்தக்க அளவான நீண்ட காலம் மக்களிடையே வழக்கத்தில் இருந்திருக்கவும், அம் மாவட்டத்து மக்களின் தாய் மொழியாம் தமிழால் ஒரளவு பாதிக்கப்பட்டிருக்கவும் வேண்டும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. ஹிரஹடக ஹள்ளி ஸாலனத்தைப் பதிப்பிக்கும் போது, திருவாளர் பூலர் (Bwhile) அவர்கள் குறிப்பிட்டவாறு, "முன்னதாகக் கொடுக்கப்பட்ட" எனும் பொருள் தருவதான "புல்வதத்தம்” என்ற பால் உணர்த்தா அஃறிணைச் சொற்றொடர், "கொடுக்கப்பட்டுவிட்ட” எனும் பொருள் உடையதான, "சம்பத்தொ” என்ற உயர்தினை ஆண்பால் உணர்த்தும் சொற்றொடரோடு இணைத்தே பொருள் கொள்ள வேண்டியுளது. ஆகவே, அச்சாளபனத்தை ஆக்கியோன் பால், பால்வேறுபாடு குறித்த உணர்வு அறவே இல்லாமை காணப்படுகிறது. பால்வேறுபாடு குறித்த உணர்வு இல்லாமையாம் இந்நிலைமை, அதை ஆக்கியோன் வழங்கும் பிராகிருத மொழி, தமிழ் மொழியின் தனிச்சிறப்பு வாய்ந்ததான பால் இலக்கணம் இல்லாக் குறைபாடு, காஞ்சீபுர மாவட்டத்தில் பெருவழக்கில் இருந்த பிராகிருதக் கிளைமொழி மீது ஆதிக்கம் செலுத்துவதற்குத் தேவைப்படும் நிலையில், மதிக்கத்தக்க அளவு நீண்டகாலம், தமிழ்நாட்டில்