பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சிபுரம் மாவட்டம் 185 அடங்கியும் அடங்காமலும், எண்ணிலாக் குறுநில மன்னர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆட்சி புரிந்து வந்துள்ளனர். அவர்களுள் சிலர், அம்மூவேந்தர்களும் ஒன்று பட்டு வந்து எதிர்த்துப் போரிட்டாலும், வெற்றி கொள்ள மாட்டாப் பேரரசர்களாய் விளங்கியுள்ளனர். சிலர், அம் மூவேந்தர்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் படைத்துணை அளிக்கவல்ல பேராற்றல் வாய்ந்தவர் களாகவும் வாழ்ந்து வந்துள்ளனர். சிலர், அவ்வேந்தர்களின் பகைவர்களாகவோ, நண்பர்களாகவோ இல்லாமல், அவர்களோடு எவ்விதத் தொடர்பும் இல்லாமல் தனியரசு நடத்தும் தன்னேரில்லாக் குறுநிலத் தலைவர்களாகவும் வாழ்ந்துள்ளனர். - தமிழக அரசியல் நிலை இதுவாகவே, மூவேந்தர்களைப் பாடிப் பாராட்டிய புலவர்களே, அக்குறுநில மன்னர் களையும் பாடிப் பாராட்டியுள்ளனர். அந்துவஞ்சேரல் இரும்பொறை முதல், யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஈறாக, இருபத்து நான்கு சேரர்குல வேந்தர்களையும், இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி முதலாக, வேல்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி ஈறாக இருபத்தொரு சோழ அரசர்களையும், அண்டர் மகன் குறுவழுதி முதலாக, வெற்றிவேற்செழியன் ஈறாக, இருபான் ஐந்து பாண்டிய அரசர்களையும் பாடிப் பாராட்டிய புலவர்களே, அதியமான் நெடுமான் அஞ்சி முதலாக, வையாவிக் கோப்பெரும்பேகன் ஈறாக வள்ளல்கள் எழுவரையும், வள்ளல்கள் என்ற பட்டியலில் இடம் பெற்றிலராயினும், அவ்வள்ளல்களிலும் மேலாக வாரி வழங்கிய அக்குரன் முதலாக, வாணன் ஈறாகப் பதின்மூன்று வள்ளியோர்களையும், அகுதை முதலாக வேங்கை மார்பன் ஈறாக ஐம்பத்தைந்து படை மறவர்களையும் பாடிப் பாராட்டியுள்ளனர். எடுத்துக்காட்டுக்கு இரண்டு. வெண்ணிப் பறந்தலையில், இருபெருவேந்தரும், பதினொரு வேளிரும் ஒருங்கே அவிய வெற்றி கொண்டான் கரிகால் பெருவளத்தான், இதைப் பரணரும் (அகம் 246)