பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 - தமிழர் வரலாறு மாமூலனாரும் (அகம் : 53), முடத்தாமக் கண்ணியாரும் (பொருநராற்றுப்படை : 143 - 48) கழாத்தலையாரும் (புறம் : 65) வெண்ணிக் குயத்தியாரும் (புறம் : 66) தங்கள் தங்கள் பாட்டிடை வைத்து அறிவித்துள்ளார்கள். வாகைப் பறந்தலையில் நடைபெற்ற பிறிதொரு போரில், ஒன்பது அரசர்களை வெற்றி கொண்டான் கரிகாலன், இதைப் பரணர் அறிந்து கூறியுள்ளார். (அகம்: 125 இவ்விரு போர்க்கள் நிகழ்ச்சிகளையும், தம் பாக்களிடையே குறிப்பிடும் அப்புலவர்கள் ஐவருள், பரணர், செங்குட்டுவன் அரசவைப் புலவராய் இருந்து அவனைப் பாராட்டியுள்ளார். (பதிற்றுப்பத்து : ஐந்தாம் பத்து) மனைவியைப் பிரிந்து பரத்தை ஒருத்தியொடு வாழ்ந்திருந்த பேகனுக்கு அறிவுரை கூறி, அவனை அவன் மனைவிடால் சேர்த்துள்ளார் (புறம் :144). குடக்கோ நெடுஞ்சேரலாதனும், வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியும் போரிட்டு ஒரு சேர மாண்டுகிடந்த களக்காட்சியைக் கண்டு கலங்கிக் கண்ணிர் விட்டுள்ளார். (புறம்: 63) அது மட்டுமல்லாமல், 1) சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி (புறம் : 4) 2) மலையமான் திருமுடிக்காரி (நற் 100) 3) ஆய் அண்டிரன் (அகம் : 152, 198) 4) அதியமான் நெடுமான் அஞ்சி (அகம் : 372) 5) கண்டீரக்கோப் பெருநள்ளி (அகம் :152) 6) வல்வில் ஓரி (குறுந் : 199; நற் : 6, 265, அகம் : 208) 7) நன்னன் (அகம் :142) 8) மிஞிலி, (அகம் : 142) 9) ஆஅய் எயினன் (அகம் : 142 : 148, 181, 208, 396) 10) அகுதை (அகம் : 76, 208) 11, 12) அன்னி மிஞலியும், அருந்துார்த் திதியனும் (அகம் : 262) 13) தித்தன் வெளியன் (அகம் : 5, 152, 226) 14, 15, 16, 17) பாணன், கட்டி, பொருநன், கணையன் (அகம் : 386) 18) மத்தி (அகம் : 6, 226 19) கழுவுள் (அகம் : 135, 20) அழிசிமகன் சேந்தன் (குறுந் : 258) 2) தழும்பன் (புறம் : 348, குறுந் : 300) 22) விரான் (நற் : 250 , 350) 23) விச்சிக் கோன் (குறுந் : 328) 24) பழையன் (பதிற்று : 44, 49) 25) வல்லங் கிழான் (அகம் : 356) என்ற இவர்களையும் பாராட்டியுள்ளார். -