பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம் மாவட்டம் . 191 கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன், கரிகால் பெருவளத் தான், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் போன்ற பேரரசன் எவனாயினும், ஒரு போர்க்களத்தில், தன்னை ஒழிந்த இருவேந்தர்களையும், எண்ணிலாச் சிற்றரசர்களையும் வெற்றிகொண்டுவிட்டான் என்றால், அங்கெல்லாம், அதுவரை நடைமுறையில் இருந்து வந்த அரசுகளை, அரசியல் முறைகளை அகற்றிவிட்டு, தன் னுடைய ஆட்சியை நிலைநாட்டிவிட்டான் எனக்கொண்டு விடல் கூடாது; அப்போரின் விளைவு, அப்போரில் தோல்வியுற்ற அரசர்களைக் காட்டிலும், தான் ஆற்றலால் மிக்கோன் என்பதை நிலைநாட்டியது மட்டுமே என்பதுதான். இதைத் திருவாளர், பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்களும் உணர்ந்துள்ளார்: "பேராற்றல் வாய்ந்த பேரரசன் ஒருவன், "ஒருமொழி வைத்து உலகாள்வான்", "ஒருதனி ஆழி உருட்டுவோன்", "உலகெல்லாம் ஒரு குடைக்கீழ், வைத்து ஆள்வோன்", "உலகெலாம் ஆள்வோன்" எனக் கூறப்படும் நிலையிலும், அவன் ஆட்சிக்கீழ் அடங்கிய நாடுகளில், ஆட்சிநிர்வாக முறைகளில், அமைச்சர், புரோகிதர் உள்ளிட்ட ஐம்பெருங்குழுக்களில் எவ்வித மாற்றமும் நிகழ்ந்துவிடுவதில்லை, போர்க்காலனிகள் எவையும் ஆங்கு ஏற்படுத்தப்படுவது இல்லை. வெற்றி கொண்ட பேரரசர் களின் சிறுபடைப் பிரிவுதானும் ஆங்கு நிறுத்தப்படு வதில்லை. பெருவீரன் ஒருவன் எண்ணற்ற நாடுகளுக்குத் தன்னைத் தலைவனாகக் கூறிக்கொள்வதும், ஆண்டுதோறும், அல்லது, அவ்வப்போது, திறைசெலுத்துவதன் மூலம், அச்சிற்றரசுகள், அப்பேரரசனின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்வதும் ஆகிய இவைதாம். அச்சொற்றொடர்களுக்குப் பொருளாம்" என அவர் கூறுவது காண்க. (பக்கம் : 147) பழந்தமிழ்ப் பாடல்கள் உணர்த்தும் இரண்டாவது உண்மை, தமிழகத்தின் தென் எல்லையாம் குமரியை உள்ளடக்கிய நாஞ்சில் நாடு, தமிழகத்தின் வடஎல்லையாம், வேங்கடத்தை உள்ளடக்கிய தொண்டை நாடு, தமிழகத்தின் வடமேற்கு எல்லைக்கு அணித்தான கொண்காணம், ஏழில்