பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைக்காலத்தில்... வடஇந்தியத் தொடர்பு 13 திற்குரிய நிலமாக மலைநாட்டைக் கொண்டிருந்தது என அறிகிறோம். மலைக்குகைகளில் வைத்திருக்கும் கால்நடைச் செல்வத்தால், சிறந்த ஒரு பழங்குடியினராவர், பாணிகள் என்பவர். அவர்கள், ஆரியருள் ஒரு பிரிவினரின் பகைவ ராவர். அவ்விரு இனத்தவரும், ஒருவரோடொருவர், பழங் காலப் புகழ்வாய்ந்த முறையாம் ஆனிரை கவர்தல் மூலம் போர் மேற்கொண்டனர். அத்தகைய போர் ஒன்றில், ஐரோப்பியப் பேராசிரியர்கள் கருதுவதுபோலும், ஒரு நாட்டின் மீது படைகளை அணிவகுத்து எடுத்துச் செல்லும் போர் அல்லாத போர் ஒன்றில், தங்கள் துணைக்கு, அக்னி, சோமன் ஆகிய கடவுள்களை நம்பியிருக்கும் கடவுள் வழிபாட்டாளர்களாகிய அக்னி, சோமன் என்ற இனத்தவர், பாணிகளிடமிருந்து கால்நடைகளைக் கவர்ந்துகொண்டனர். இந்திரன் அல்லது அவனுக்காகப் பணியாற்றும் பிரகஸ்பதி, பாணிகளின் கால்நடைகளைக் கவர்ந்து கொண்டான். இவ்வகையில், பாணிகள் என்பார் தஸ்யூக்களில், கால்நடைச் செல்வத்தால் சிறந்த ஒர் இனத்தவராவர்; அவர்கள் வணிகர்களே அல்லர் என்பது காணக்கிடக்கிறது. வேதகாலத்தில் தென்னிந்திய வாணிகம், கடலைச் சார்ந்து வாழ்ந்து, மிகப் பழைய காலத்திலிருந்தே, பரதவர் என அழைக்கப்பட்டு வரும் வணிகர்கள் கையில் இருந்தது. சேர நாட்டில் ஆரியர் : "மூன்று இனத்தவர் ஆணை மீறினர்" -ப்ரஜா ஹதிஸ்ரொ அத்யாயம் கீயூஹ்" என்ற ஒரு தொட்ர், ரிக் வேதத்தில் (7:101:14) வருகிறது. இத் தொடர்க்கு விளக்கம் அளிக்கும் நிலையில், "தைத்திரிய ஆரண்யகம்" ஆணை மீறிய இம் மூன்று இனத்தவர், வாயசகர், வங்காகடர், சேரபாதகர்வயா வைதா இமாஹ் ப்ரஜாஸ் திஸ்ரொ அத்யாயம் ஆயன் தானி இமானி வாயம்ஸி வங்காவகடாஸ் செரபாதாஹ்" என்கிறது.