பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~, காஞ்சீபுரம் மாவட்டம் 193 ஏற்றரும், நெடுங்கோட்டு ஒங்குவெள் ளருவி வேங்கடம்" (அகம் : 213). அவ்வேங்கட நாட்டு வெண்கோட்டுக்களிறுகள், பாண்டியர் படைக்குப் பெருமை சேர்க்கும் பேராண்மை - வாய்ந்தவை என்கிறார், மதுரைக்கணக்காயர், "வேங்கடம் பயந்த வெண்கோட்டு யானை மறப்போர்ப் பாண்டியர்” (அகம் : 27) கன்று ஈன்ற பிடி, அது ஈன்ற கன்று ஆகியவற்றின் பசியினைப் போக்க மூங்கிலின் முற்றா இளந்தளிர்களைக் கொய்து கொணர்ந்து தரும் களிறுகள் நிறைந்த வேங்கடமலை, வெற்றி தரு வேலேந்திய திரையனுக்கு உரியது எனக்கூறித் தொண்டையர்க்கு உரியதான அவ்வேங் கடத்தைத் திரையனுக்கும் உரிமையாக்குவதன் மூலம் தொண்டையர்க்கும் திரையனுக்கும் உள்ள உறவினை நிலைநாட்டியுள்ளார், காட்டுர் கிழார் மகனார் கண்ணனார், "ஈன்று நாள் உலந்த மென்னடை மடப்பிடி, கன்றுபசி களைஇய, பைங்கண் யானை, முற்றா மூங்கில் முளை தருபு ஊட்டும் வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை" (அகம் : 85). திரையனைப் பாட்டுடைத் தலைவனாகாக் கொண்டு, பெரும்பாணாற்றுப்படை பாடும் புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார், திரையனுக்கு உரிய மலை, முத்தீ மூட்டி வேள்விவேட்க விரும்பிய முனிவர்கள், களிறுகள், தங்கள் வெண்கோடுகளில் சுமந்து கொண்டுவந்து கொட்டும் விறகு கொண்டு வேள்வித் தி எழுப்பும் விழுப்புகழ் வாய்ந்தது எனக் கூறுவதன் மூலம், வேழங்கள் மலிந்த வேங்கடமலைக்கு உரியான் திரையன் எனக், காட்டுர்கிழார் கூறியதைத் தாமும் உறுதி செய்துள்ளார். "செந்திப் பேணிய முனிவர், வெண் கோட்டுக் களிறுதரு விறகின் வேட்கும் ஒளிறு இலங்கு அருவிய மலைகிழ வோனே" (பெரும்பாண் : 498-500) இவ்வகையால், தொண்டையர்க்கு உரிய வேங்கடம் திரையனுக்கும் உரியது எனக் கூறியதன் மூலம், தொண்டையர்க்கும், திரையனுக்கும் உள்ள உறவினை மறைமுகமாக உணர்த்திய பெரும்பாணாற்றுப்படை ஆசிரியர், அப்பாட்டுடைத் தலைவன் பெயர் திரையன் என்பதைப் "பல்வேல் திரையன் படர்குவிராயின்" (37) எனக் கூறியதன் மூலமும், அவன் தொண்டையர் மரபில் வந்தவன்