பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம் மாவட்டம் 203 விடுத்தே எடுத்தாள்வதை மரபாகக் கொண்டுவிட்ட பழந்தமிழ்ப் புலவர்கள், தமிழகத்துத் தலையாய நகர்களுள் ஒன்றாகிய காஞ்சிக்கு, அவ்வட நாட்டுப் பெயர் ஈற்றுப் பகுதியாம் "புரம்" என்பதை இணைத்துக் "காஞ்சீபுரம்" என வழங்கினர் என்பது, வாத நெறியில் ஏற்றுக் கொள்ள இயலாத ஒன்று. ஆகவே, அந்நகர்க்குப் பழந்தமிழர் இட்டு வழங்கிய பெயர் "காஞ்சி" என்பதே; அம்மாநகரில் வந்து வாழத் தொடங்கிய சமஸ்கிருத மொழியாளர், தங்கள் வட நாட்டுப் பெயர் மரபை ஒட்டி புரம் என்பதைக் காஞ்சியோடும் இணைத்துக் காஞ்சீபுரம் என மாற்றி அழைத்தனர் என்பதே, இயல்பாகப் பெறக்கூடிய முடிவாகும். - - காஞ்சி என்பதே அதன் இயல்பான பெயராயின், ஏறத்தாழ இருநூற்றுக்கும் மேற்பட்ட ஊர்ப் பெயர்களைக் குறிப்பிடும் பழந்தமிழ்ப் பாக்களில், "காஞ்சி" என்ற பெயரும் இடம் பெற்றிருக்க வேண்டும்; ஆனால், அது இடம் பெறவில்லை. "காஞ்சீஊர" "காஞ்சி ஊரன்" என்று தொடர்கள் (அகம் : 96. குறுந் :10, 127) இடம் பெற்றுள்ளன என்றாலும், அவை, "காஞ்சி" என்னும் ஊர்ப்பெயர் உணர்த்துவனவல்ல. காஞ்சி மரங்கள் நிறைந்த ஊருக்கு உரியவன் எனும் பொருள் தந்து காஞ்சி என்ற மரத்தின் பெயரை உணர்த்துவனவே. அதுபோலவே, மகளிர், "காஞ்சி நீழல் குரவை அயரும்" (அகம் : 336), "நீர்த்தாழ்ந்த குறுங் காஞ்சிப் பூக்கது.உம் இளவாழை" (புறம் : 18) "நாரை தேம்கொள் மருதின் பூஞ்சினை முனையின் காமரு காஞ்சித் துஞ்சும்" (புறம் : 35) என வேறு பல இடங்களிலும், "காஞ்சி" எனும்சொல் இடம் பெற்றிருந்தாலும், அங்கெல்லாம், அது, காஞ்சிமரம் எனும் பொருளில் வந்துள்ளதேயல்லது காஞ்சிநகர் எனும் பொருளில் வரவில்லை, என்ற வாதத்தையும் வைத்துள்ளார் திருவாளர். பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்கள். (பக்கம் : 323) - - - திருவாளர் அய்யங்கார் அவர்கள் மேலே எடுத்துக் காட்டிய தொடர்களில் இடம்பெறும் "காஞ்சி” எனும் சொல், மரத்தின் பெயரையே குறிக்கிறது என்பது உண்மை. 14