பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 தமிழர் வரலாறு ஆனால் "காஞ்சி" எனும் சொல், ஊர்ப் பெயரைக் குறிக்கும் வகையில் ஆளப்படுவதும் பழந்தமிழ்ப் பாடல்களில் இடம் பெற்றுளது. கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவனைப் பாடிய பரணர், தம்முடைய பதிற்றுப்பத்துப் பாடல் ஒன்றில், அவனை வாழ்த்துங்கால், "நின் பெயர் வாழியரோ... காஞ்சியம் பெருந்துறை மணலினும் பலவே" (பதிற்று : 48) என வாழ்த்தியுள்ளதும், அக்காஞ்சியாறு, கோவை மாவட்டம் பேரூர்க்கு அருகில் ஒடும் ஆறு எனும் பொருள் கொண்டு அதை உறுதி செய்ய, "eகொங்கில் அணி காஞ்சி வாய்ப் பேரூர்ப் பெருமானை" என்ற நம்பியாரூரர் தேவாரப் பாடலை எடுத்துக் காட்டாகக் கொள்வதும் காண்க. கொங்கு நாட்டில் ஒடும் ஒர் ஆறு, காஞ்சி எனும் பெயர் பெற்றுளது. அது ஒடும் இடம், தமிழகத்து மக்கள் ஒரு சிலரால் மட்டுமே அறியத்தக்கதாக, தமிழகத்தின் ஒரு கோடியாம் கொங்கு நாடே எனினும், காஞ்சி எனும் பெயரே, பழந்தமிழ் இலக்கியத்தில் இடம் பெறவில்லை என்ற கூற்றினை மறுக்கவல்ல, நல்ல வலுவான சான்றாக, அது அமைந்துவிட்டது. - மேலும், காஞ்சி எனும் பெயரைக் கொங்கு நாடு சென்றுதான் தேடி அலையவேண்டும் என்ற தேவையும் இல்லை. காஞ்சியிலேயே, அது காணக்கிடக்கிறது. நற்றிணை 123 ஆம் பாடலைப் பாடிய புலவர் பெயர், காஞ்சிப் புலவர் என்பது. அதுபோலவே, குறுந்தொகை, 173 ஆம் பாடலைப் பாடிய புலவர், மதுரைக் காஞ்சிப்புலவர் என்பது, அதே குறுந்தொகையில் 213, 216 பாடல்களைக் பாடிய புலவர் பெயர், கச்சிப் பேட்டுக்காஞ்சிக் கொற்றனார் என்பது. இவர் பெயரில் காஞ்சியின் பிறிதொரு பெயரும், பெரும் பாணாற்றுப்படையால், திரையன் தலைநகராம் பெருமைப் படுத்தப்பட்டதுமான கச்சியும் இணைந்தே வழங்கப் பெறுவது கவனிக்கத்தக்கது. மேலும், அதே குறுந் தொகையில், 30,172,180,192, 197, 287 பாடல்களைப் பாடிய ஒரு பெண்பாற்புலவர் பெயர், கச்சிப்பேட்டு நன்னாகையார் என்பது கூறிய எடுத்துக்காட்டுக்களால், புலவர் பலரை