பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 தமிழர் வரலாறு ருப்பது ஏன்? அவர், அது குறிப்பிடாமை, காஞ்சி இன்மையை உறுதி செய்வதாகக் கோடல் கூடாதோ என்ற கேள்வி எழல் கூடும். கேள்வி, விடையிறுக்க வேண்டிய முக்கிய கேள்விதான். எட்டுத்தொகை, பத்துப்பாட்டுப் பாக்களால் அறியப்படும் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் உள்ளிட்ட பாண்டிய அரசர்களைப் புகழ்ந்து பாடும் புலவர்க ளுள், மாங்குடி மருதன் தவிர்த்த அனைத்துப் புலவர்களும், அப்பாண்டிய அரசர்களோடு, அப்பாண்டியர் தலைநகரை இணைத்துப் பாடும்போது, மதுரையைக் கூறாமல், கூடலையே கூறியுள்ளனர். பாண்டியர் தலைநகரைக் குறிப் பிடும் பாடல்கள், நற்றிணையில் இரண்டு (39, 298) அகத்தில் ஐந்து (93, 16, 253, 296, 315) புறத்தில் ஒன்று (88). நெடுநல்வாடை மூலம், செழியன் புகழ்பாடும் நக்கீரரும், அப்பாட்டில், மதுரை கூடல் என்ற இரண்டில் எந்த ஒரு பெயரையும் குறிப்பிடவில்லை எனினும், அவன் புகழ் பாடும் அகநானூற்றுப்பாடல் ஒன்றில் "நாடுபல தந்த பசும்பூண் பாண்டியன் பொன்மலி நெடுநகர் கூடல்" (213) எனக் கூடலை மட்டுமே குறிப்பிட்டுள்ளார். மதுரைக்காஞ்சி மூலம், நெடுஞ்செழியன் புகழ்பாடும் மாங்குடி மருதனார், அப்பாட்டில் 699 ஆம் வரியில் மதுரையைக் குறிப்பிட்டுள்ளார் என்றாலும், அது குறிப்பிடுவதன் முன்னர், 429ஆம் வரியில், "மாடம்பிறங்கிய மலிபுகழ் கூடல்" எனக் கூறி, கூடலுக்கே முதல் இடம் தந்துள்ளார். . பாண்டியர் தலைநகர்க்கு, மதுரை, கூடல் என்ற இரு பெயர்கள் இருக்கவும், பாண்டியர் புகழ்பாடும் புலவர் பலரும், கூடலுக்கே முதல் இடம் தந்து குறிப்பிடுவது போல் வேங்கடம் அடுத்த தொண்டைநாட்டுத் தலைநகர்க்கு காஞ்சி, கச்சி என்ற இரண்டு பெயர்கள் இருக்கவும், அக்காஞ்சி நாடு பாடிய புலவர், பெரும்பாணாற்றுப்படை ஆசிரியர், காஞ்சியைக் குறிப்பிடாமல், கச்சியை மட்டும் குறிப்பிட்