பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம் மாவட்டம் 207 டுள்ளார் எனக் கொண்டால், அவ்வாறுதான் கொள்ள வேண்டும். அப்பகுதி, தமிழ் அரசர்களால் ஆளப்படவில்லை என்பதற்கு, அப்பகுதி தலைநகர்க்குத் தமிழ்ப் பெயர் இடப்படவில்லை என்பதைக் காரணமாக்க காட்டும் வாதம், பொருளற்ற வாதமாகப் போய்விடுவது காண்க. வேதகாலம் கி. மு. 3000க்கும் கி. மு. 1500க்கும் இடைப்பட்டது என்பது, திருவாளர் அய்யங்கார் அவர்கள் முடிவு, தமிழர் வரலாறு முன்னுரை, பத்தி 7. காண்க. அவ் வேத காலத்தில், அணி நலம் குறித்து, வடஆரியர்கள், பயன் படுத்துப்பட்ட பொருள்களுள், தென்கோடி விளைபொருளாம் முத்து (பக்கம் : 22) வேத இலக்கியங்களில் "முக்தா" "விமுக்தா" என வழங்கப்படுவது கொண்டு, திருவாளர்கள், மெக்டோனால், கெய்த், மோனியர் வில்லியம்ஸ் ஆகிய வரலாற்றுப் பேராசிரியர்கள், சிப்பியிலிருந்து விடுவிக்கப்பட்டது எனப் பொருள் கூறி, அச்சொற்களுக்குச் சமஸ்கிருதப் பிறப்பியல் கூறவும், திருவாளர் அய்யங்கார் அவர்கள், அவர்களின் அம்முடிவை மறுத்துவிட்டு, வேதகால ரிஷிகள் தென்கோடி முத்தோடு, முத்து எனும் பொருள் உடையதான "முத்தம்" என்ற அதன் பெயரையும் கடனாகப் பெற்று, "முக்தா" என்ற சமஸ்கிருத வடிவமும் கொடுத்து விட்டனர் என உறுதி தொனிக்கும் குரலில் கூறியுள்ளார். (பக்கம் : 23, 24). தமிழகத்தின் தென்கோடியில் வழங்கிய முத்து என்ற தமிழ்ச்சொல், கி. மு. 1500க்கு முன்னரே, வடஇந்தியாவுக்குச் சென்று, அவ்வடவர்களால், "முக்த" என்ற அவ்வடவர்களின் சமஸ்கிருத வடிவம் பெற்று வழங்கலாயிற்று என்றால், கி. மு. நான்காம் நூற்றாண்டில், அதாவது தமிழகத்து "முத்து" என்ற தமிழ்சொல், வடநாட்டிற்குச் சென்று, அவ்வடமொழி வடிவினதாக மாறி வழங்கப்பட்ட காலத்துக்கு இரண்டா யிரம் ஆண்டுகளுக்குப் பிற்பட்ட காலத்தில், தமிழகத்தின் வடவெல்லை நாட்டு நகரின் பெயராம் காஞ்சி அவ்வடவரால், அப்பிற்பட்ட காலத்தே கொண்டு வரப்பட்ட "காஞ்சீபுரம்" என்ற சமஸ்கிருதச் சொல்லின், சுருங்கிய