பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 தமிழர் வரலாறு பழக்கவழக்கங்கள், தச்செளயை (chow.ya) நாட்டுமக்கள் பழக்கவழக்கங்கள் போலவே உள்ளன. இந்நாடு பரந்து அகன்று, மக்கள் பெருக்கத்தால் மிகுந்து, அரும்பொருட்கள் பலவற்றை ஆக்குவதாக விளங்குகிறது. கி. மு. 140-86 காலத்தவரான, பேரரசர் வெள' (Wow) காலம் முதல், அரும் பொருட்களைச் சீனாவிற்கு அனுப்பி வைக்கிறது" என எழுதி வைத்திருப்பதை எடுத்துக் காட்டியுள்ளார். "பான்-கெள" என்ற சீன எழுத்தாளன் கூறியதை, முதல்பத்தியில் எடுத்துக் காட்டிய திருவாளர் நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள், இரண்டாவது பத்தியில், "டெளங்பாவோ" (Towng-pao) என்ற நூலில், திருவாளர் 'பால்பெல்லி யோட் அவர்கள், ஹெளஆங்-டெக் (Hawang-teche) என்ற தொடருக்குப், பல்வேறு வரலாற்றுப் பேராசிரியர்கள் அளிக்கும் விளக்கங்களையெல்லாம் மறுத்துவிட்டு, ஹன்' (Har) காலத்துச் சீனமொழி ஒலியியல் கூற்றுப்படி, ஹெள ஆங்-டெக்' என்பதற்குக் "காஞ்சி" என்பதே ஏற்புடைய இணையாம்" எனத் திருவாளர் பெர்ரன்ட் (Ferrand) என்பார் கூறும் விளக்கத்தையும் எடுத்தாண்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், கி.பி.11ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு, சீனப்பேரரசுக்கு அனுப்பிய தூதுவர், சீனா சென்றடைய எட்டுத் திங்களை எடுத்துக் கொண்டுள்ளார் என்பதை எடுத்துக் காட்டுவதன் மூலம், கி. மு. இரண்டாம் நூற்றாண்டில், சீன யாத்திரிகன் ஒருவன், காஞ்சி வந்து சேர, 12 திங்களை எடுத்துக்கொள்ள நேர்ந்தது என்பது ஏற்கக் கூடியதே என்பதை வலியுறுத்தும், திருவாளர் பால் பெல்லியோட், அவர்களின் வாதத்தையும் எடுத்து வைத்துள்ளார், திருவாளர் நீலகண்ட சாஸ்திரியார்.அவர்கள் (பக்கம் : 45). - - - ஆக, மேலே கூறியிருப்பனவற்றையெல்லாம் எடுத்தாண்டி ருப்பதன் மூலம், கி.மு. இரண்டாம் நூற்றாண்டு காலத் திலேயே காஞ்சிநாடு, 'காஞ்சி' என்ற பெயரிலேயே இடம் பெற்றிருந்தது. சீன நாட்டிற்கு அரும்பொருட்களை அனுப்பும் வளம்மிக்க நாடாகவும் திகழ்ந்தது என்பதற்கான