பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 தமிழர் வரலாறு இறந்த பிறகு பிறந்த மகனாதலின், சோழ அரியணையை, அவன் இடையூறுகள் இல்லாமல் அடைந்து விட்டானல்லன்; இளையவனாய் இருக்கும்போது, அடாவழியில் ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டவரால், அவன் சிறை செய்யப்பட்டான். அச்சிறையினின்றும் விடுதலைபெற, அவன் போராடினான். புலவர் கூறுமாறு "கூரிய நகத்தினையும், வளைந்த வரிக்கோடுகளையும் உடைய புலிக்குட்டி, கூட்டிலே அடைபட்டிருந்து வளர்ந்தது போலப் பகைவர் இட்ட சிறையகத்தே இருந்து, தனக்குரிய அறிவு ஆண்மைக் குணங்களால் வயிரம் மரம் போல் முதிர்ந்து, குழியில் அகப்பட்டுக்கொண்ட நீண்ட கையினைக் கொண்ட ஒர் ஆண்யானை. அக்குழியின் ஏறுதற்கரிய கரைகளைத் தன் கோட்டால் குத்திச் சரித்துக் குழியைத் துார்த்துவிட்டு ஏறித் தன் பிடியோடு சேர்ந்து கொண்டதுபோல், சிறையினின்றும் வெளியேறி, வெற்றி கொண்டு அரியணையில் அடையும் வழிமுறைகளைப் பலகாலும் ஆராய்ந்து, அப்பகைவரின் அழிக்கலாகாத் திண்மை வாய்ந்த காவற்சிறை மதிலைக் கடந்து வெளிப்போந்து, வாள்கொண்டு போர் செய்து வென்று, தன் அரச உரிமையை முறைப்படி அடைந்தான்." "கூர் உகிர்க் - - கொடுவரிக் குருளை, கூட்டுள் வளர்ந்தாங்குப், - * - h o - - பிறர், பிணியகத்து இருந்து, பீடுகாழ் முற்றி, அருங்கரை கவியக் குத்திக், குழிகொன்று, பெருங்கை யானை, பிடி புக்காங்கு, நுண்ணி தின் உணர நாடி, நண்ணார் செறிவுடைத் திண்காப்பு ஏறி, வாள் கழித்து உருகெழு தாயம் ஊழின் எய்தி". - -- பட்டினப்பாலை ; 220-227. அரச உரிமையை இவ்வாறு பெற்றுக்கொண்டதோடு, மனநிறைவு கொள்ளாத அவன், பிறநாடுகள்மீது போர் தொடுத்துச் சென்றான். அவனுடைய நாற்படையைச் சேர்ந்த