பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 தமிழர் வரலாறு மாத்தானை மற மொய்ம்பின், செங்கண்ணால் செயிர்த்து நோக்கிப், புன்பொதுவர் வழிபொன்ற, இருங்கோவேள் மருங்கு சாய” - பட்டினப்பாலை : 274 - 282. இப்பட்டியலில் கூறப்பட்டவருள், இருங்கோவேள், என்ற குறுநிலத்தலைவன், புதுக்கோட்டை மாவட்டத்தில், திருச்சிராப்பள்ளி, மதுரை நெடுஞ்சாலைக்கண் உள்ள பழைய நகராம் கொடும்பாளுரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டிற்குத் தெற்கில் உள்ள மாவட்டங்களை ஆண்டிருந்தான். அருவா நாட்டுக் குறுநிலத் தலைவனும், ஒளியர்குலத்தலைவனும், சோழ, பல்லவ நாடுகளுக்கு இடைப்பட்ட மாவட்டங்களை ஆண்டு வந்தனர். இவ்விரு நாடுகளையும் வெற்றி கொண்டுவிடவே, கரிகாலன், வடவர்களை, அதாவது, காஞ்சி ராஜாக்களாம் பல்லவர் களைப் பணி கொண்டான். அவன், மேலும் படையெடுத்துச் சென்று, கடப்பை, கர்னூல் மாவட்டங்களை ஆண்டு கொண்டிருந்த பொதுவர் குலத் தலைவர்களைத், தன் ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தான். பொதுவர் என்ற சொல், ஆயர் தலைவர் எனும் பொருள் உடைத்து, ஆகவே, அது பல்லவ நாட்டின் மருத நிலப்பகுதிக்கு வடக்கில் உள்ள முல்லை நாட்டுப் பழங்குடியினர் தலைவர்களைக் குறிப்பதாகும். கரிகாலனால், தன் ஆட்சிக்கீழ்க் கொண்டுவரப் பட்ட அவ்வாயர்கள், அம்மாவட்டங்களில், இன்றும் வாழ்ந்து, அப்பகுதியில் புகழ் பெற்ற கம்பளி நெய்யும் குறும்பராவர்”. ருெம்புகழ்க் குரியவனும், வெல்லும் போர் வல்லவனுமாகிய கரிகாலன், குன்றுகளில் ஆனிரை மேய்க்கும் குறும்பர் குடியைப் பேணிக்காத்தான். "குறும்பறை பயிற்றும் செல்குடி நிறுத்த பெரும்பெயர்க் கரிகால் تاریخ வெல்போர்ச் சோழன்" - அகம் : 141 : 21-23.