பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் 231 அலுவலர், காயும் கதிர்களைக் கொண்டோனாகிய ஞாயிற்றின் தேரில் பூட்டப்பட்ட குதிரைகள், நாளும், நாழிகையும் தவறாது, நடைமெலிவு காணாது, ஈர்த்துச் செல்வதேபோல், இரவு பகல் ஓயாமல், ஒரு சிறிதும் தளர்வின்றிக் கடமை ஆற்றிக்கொண்டிருப்பர். முகில் உலாவும் முடியினையும், மூங்கில் வளரும் சாரலினையும் உடைய மலைகளில், துள்ளித்திரியும் எட்டுக் கால்களையுடைய வருடை என்ற கற்பனைப் பறவைபோலத் தோன்றும், கூரிய நகத்தினை உடைய மயிலும், வளைந்த கால்களையுடைய எருதும், ஆட்டுக்கிடாய்களும், வீடுகளின் முற்றத்தில் துள்ளிக்குதித்து இன்புறும். (மொழிபெயர்ப்பு ஆசிரியர் குறிப்பு : இப்பொருள் கொள்வதற்குக் காரணமாயிருப்பன. 137 முதல் 141 வரையான வரிகளாம். இவ்வரிகளுக்குப் பண்டக சாலையின் முற்றத்தில், புலிச் சின்னம் பொறித்து, மலைபோலக் குவியப் போடப் பட்டிருக்கும் பண்டப் பொதிகள் மீது, மலைமீது துள்ளி ஆடும் வருடை மான்போல், நாய்களும், ஆட்டுக் கிடாய்களும் துள்ளி ஆடும் எனப்பொருள் கொள்வதே நேரிதாம்). ஏறி மனைபுகுவதற்குத் துணைபுரியும் அடுத்தடுத்த பல படிகளையும், உயர்ந்த ஏணிகளையும் கொண்டு, பல கட்டுக்களையும், சிறுவாயில், பெருவாயில் எனப் பல வாயில்களையும், நீண்ட இடைகழிகளையும் உடைய, அம்மாட மாளிகையின், மேகம் தவழும் மேல் மாடியில், சிவந்த அடிகள், திரண்ட துடைகள், உயர்ந்த அணிகள், பெரிய அல்குல், மெல்லிய ஆடை, பவளம் போலும் மேனி, மயில்போலும் சாயல், மான்போலும் நோக்கு, கிளி போலும் மழலை, மென்மையான சாயல் ஆகிய நலமெலாம் பெற்ற நங்கை நல்லார் தென்றல் காற்று உள்நுழையும் பலகளிை அருகே அமர்ந்து காட்சி இன்பத்தில் ஆழ்ந்து போவர். "நெடுந் தூண்டிலின் காழ் சேர்த்திய குறும் கூரைக் குடிநாப்பண், நிலவு அடைந்த இருள்போல, வலை வணங்கும் மணல் முன்றில்,