பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் 233 கொடுந்திமில் பரதவர் குரூஉச் சுடர் எண்ணவும், பாடல் ஒர்த்தும், நாடகம் நயந்தும், வெண்நிலவின் பயன் துய்த்தும் கண்ணடைஇய கடைக் கங்குலான், மாகாவிரி மணம் கூட்டும், துஉ எக்கர்த் துயில் மடிந்தும், வாலினர் மடல் தாழை வேலாழி வியல் தெருவில் நல் இறைவன் பொருள்காக்கும் தொல் இசைத் தொழில் மாக்கள், காய்சினத்த கதிர்ச் செல்வன், தேர் பூண்ட மாஅ போல, வைகல் தோறும் அசைவின்றி, உல்கு செயக் குறைபடாது வான்முகந்த நீர் மலைப் பொழியவும், மலைபொழிந்த நீர் கடல் பரப்பவும், : மாரி பெய்யும் பருவம் போல, நீரினின்று நிலத்து ஏற்றவும், நிலத்தினின்று நீர்ப் பரப்பவும், அளந்தறியாப் பலபண்டம், வரம்பறியாமை வந்தீண்டி х அருங்கடிப் பெரும் காப்பின் வலியுடை வல்லணங்கினோன், . புலிப் பொறித்துப் புறம் போக்கி, மதி நிறைந்த மலிபண்டம் பொதி மூடைப் போர் ஏறி, மழையாடு சிமைய மால்வரைக் கவாஅன். வரையாடு வருடைத் தோற்றம் போலக்