பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் : 235 தென்கடல் முத்தும், குணகடல் துகிரும் கங்கை வாரியும், காவிரிப் பயனும், ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும், அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி". - பட்டினப்பாலை : 185 -192. அந்நகரத்துத் தெருக்களில், பன்மொழி பேசும் மக்களைக் காணலாம் என்றும் பட்டினப்பாலை ஆசிரியர் கூறுகிறார். ("மொழிபல பெருகி பழிதீர் தேஎத்துப் புலம்பெயர் மாக்கள் கலந்து இனிய உறையும்" - 216, 1217). ஆகவே, காவிரிப் பூம்பட்டினம், கரிகாலன் காலத்தில், வளங் கொழிக்கும் துறைமுகப் பட்டினமாகத் திகழ்ந்தது என நம்பலாம். நகரத்தில் ஆரிய நாகரிகம் : இவ்வாணிகத்தின் தலையாய காரணத்தால், தமிழகத்தின் இத்துறைமுக நகரத்திற்கும், வடஇந்தியாவுக்கும் இடையில் மிக நெருங்கிய போக்குவரத்து இருந்தது. ஆகவே, ஆரிய நாகரிகம், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பரவியதிலும் முன்னதாக, இந்நகரில் பரவத் தொடங்கிவிட்டது. பிற இடங்களில் பெறாத செல்வாக்கை ஆங்குப் பெற்றுவிட்டது. இப்பாட்டு அளிக்கும் சான்றுப்படி, காவிரிப்பூம் பட்டினத்தில், புத்த, சமணப்பள்ளிகளும், ஒளிவீசும் சடை முடியுடையராகிய முனிவர்கள் எடுக்கும் வேள்வித் தீயிலிருந்து எழும் வேள்விப் புகைக்கு அஞ்சிக் குயில், தன் கரியபெரிய பெடையோடு பறந்தோடிவிடும் பூம்பொழில் களும் இருந்தன. "தவப் பள்ளி, தாழ்காவின் அவிர்சடை முனிவர் அங்கி வேட்கும் ஆவுதி நறும்புகை முனை.இக் குயில் தம் மாயிரும் பெடையோடு இரியல் போகி". - பட்டினப்பாலை : 53 - 56. 16