பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் 237 "அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும், நல்ஆனொடு பகடு ஓம்பியும் நான்மறையோர் புகழ் பரப்பும்" - பட்டினப்பாலை : 200 - 202. இறவாப் பெரும்புகழ் வாய்ந்த அவ்வமரர்கள், நகரின் காவலர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர் ("செல்லா நல்லிசை அமரர் காப்பின்" பட்டினப்பாலை : 184). குற்றம் தீர்த்துப் புகழ் ஏற்றி நிறுவப்பட்ட கடவுள்களும், ஆரியக் கடவுளாகவே தெரிகின்றன. ("மையறு சிறப்பின் தெய்வம் சேர்ப்பிய" பட்டினப்பாலை : 159) . . . பழந்தமிழ்க் கடவுள்களும் வழிபடப்பட்டனர் : ஆரியக் கடவுள்களின் கடுந்தாக்குதலால், பழந்தமிழ்க் கடவுள்கள் கைவிடப்பட்டுவிடப்படவில்லை. நகரங்களில் அக்கடவுள்களும் சிறப்புற்றிருந்தனர். அகன்ற பெரிய அங்காடி வீதிகளில், வெறியாடு மகளிரின் ஆடல்பாடல் களுக்கேற்பச் குழலும், யாழும் இசைக்க, முழவும், முரசும் முழங்க நடைபெறும் முருகவேள் விழா இடையறவு படாது நிகழ்ந்து கொண்டிருக்கும். - "செவ்வேள் - வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்க் குழல் அகவ, யாழ் முரல, முழவு அதிர, முரசு இயம்ப, விழவு அறா வியல் ஆவணம்". , - - - பட்டினப்பாலை :154 - 158. இக்கால அளவில், முருகன், மலைநாடாம் குறிஞ்சியிலிருந்து, ஆற்றுப்பள்ளமாம் மருதத்துக்குக் குடிபெயர்ந்து விட்டான். களத்தில் உயிர் நீத்துக் கடவுளாகிவிட்ட வீரர்களை அவர் நினைவாக நடப்படும் நடுகல்லில் இடம் கொளச் செய்து, அவர் கையாண்ட வேலையும் கேடயத்தையும் உடன் வைத்து வழிபடுவதும் தொடர்ந்து நடைபெற்றது. - ‘. . . .