பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் - 239 எரி ஒம்பல் நெறிக்குக் கரிகாலன் ஆதரவு : - கரிகாலன், தன்னுடைய புதிய தலைநகரில், ஆரிய நாகரிகத்தோடு கொண்டுவிட்ட நெருக்கமான தொடர்பின் விளைவு, அவனுடைய கற்பனை வளமெல்லாம், பிராமணர் களால் செய்து காட்டப்பட்ட ஒளிமயமான எரியோம்பல் நெறிகளால் கவரப்பட்டு, அவன், பொருட்செலவுமிக்க வேதயக்ளுங்களைப் பொருள் அளித்துப் பேணிக்காத்த முதல் தமிழரசன் ஆயினன் , தமிழ்நாட்டில் செய்துகாட்டப்பட்ட மிகப்பெரிய ஸ்ரார்த்தச் சடங்கு முறையின் மிகப் பழைய விளக்கம், கரிகாலன் இறப்பை எண்ணிப், புலவர் கருங்குழல் ஆதனார் பாடிய கையறு நிலைச்செய்யுளில் காணப்படுகிறது. "அறத்தைத் தெளிய உணர்ந்த ஒழுக்கத்தால் மாட்சிமைப் பட்ட, அந்தணர்களின் அவையின்கண், வேள்விக்குரிய முறைகளை நன்றாக உணர்ந்த ஆறங்கங்களையும் உணர்ந்த சடங்கவிகள், வேள்விச் சடங்குகளை முன்னின்று காட்ட, பலராலும் புகழப்பட்ட, தூய இயல்பு வாய்ந்த கற்பு, ஒழுக்கமாம் உயர்ந்த கொள்கையினராய, குற்றம் தீர்ந்த குலமகளிரோடு இருந்து, வட்டவடிவில் பல படையாகக் கட்டப்பட்ட மதில்களால் சூழப்பட்ட வேள்விச்சாலையில், பருந்து வடிவமாகச் செய்யப்பட்ட இடத்தில் நாட்டிய யூப மாகிய நெடிய கம்பத்தில் வேதத்தால் சொல்லப்பட்ட முறைப்படி வேள்வியினைச் செய்துமுடித்து". "அறம் அறக்கண்ட நெறிமாண் அவையத்து முறை நற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த து.ாவியற் கொள்கைத் துகளறு மகளிரொடு பருதி உருவின் பல்படைப் புரிசை எருவை நுகர்ச்சி யூப நெடுந்துாண் வேத வேள்வித் தொழில்முடித் ததூஉம்". . . . . - - புறநானூறு : 224 : 4 - 9. கரிகாலன் எரியோம்பலை ஆதரித்ததைப் பிற்கால அரசர்களும் பின்பற்றுதல் : - - கரிகாலனால் தொடங்கப்பட்ட வேதயக்ளுங்களுக்கு