பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 தமிழர் வரலாறு பின்னொரு காலத்தில், அவ்வரச இனம் மறைந்துவிட்டது. "அவர்களில் சிலர் பல்லவ நாட்டின் வட பகுதியை வென்று கைக்கொண்ட மேற்குச் சாளுக்கியர்களுக்கு அடங்கிய வராயினர். இவ்வினத்தோடு உறவுடைய ஒரு பிரிவினர், நாகவம்ஸ் அரசன் ஜகதேக பூஷணன் (கி. பி. 1060 - 1061) ஆட்சியின் கீழ்ச் சக்கர கோடத்தில், பணியினைத் தேட, மேலும் வடக்கு நோக்கிப் பயணம் மேற்கொண்ட தாகத் தெரிகிறது". (சென்னை கல்வெட்டு அறிக்கை : ஆண்டு : 1909 : Lääib : 112 (Madras Ep. Report for 1909 : Page : 112). மத்திய மாகாணத்துக் கோண்டு அரச இனம் இவர்களால் தோற்றுவிக்கப்பட்டது.) பன்னிரண்டு, பதின்மூன்றாம் நூற்றாண்டுகளில், குண்டுர், நெல்லூர், வட ஆர்க்காடு, கடப்பை, செங்கற்பட்டு மாவட்டங்களில், வாரங்கல் காகத்தியர்களுக்குக் கடமைப்பட்டவராகிய, இப்போது "தெலுகு சோட" (Telugu Coda) எனத் திரிந்து வழங்கும். தெலுங்குச் சோழ அரச குடும்பங்கள் வளம் பெற்றிருந்தன. (Madras Ep. Report for 1900 Page : 17) smajóluff giraptb, தங்கள் கால்வழியினைக் சூரியனிலிருந்து கண்டு, கரிகால சோழ அரசனை, அவர்களின் புராண வழி முன்னோர் affandruid analog, arcărgyőlairport (Madras Ep. Report for 1900 : Page ; 106 : Page:44) அனந்தபூர் மாவட்டத்திலும், கன்னட நாட்டு எல்லைப் பகுதிகளிலும் கூட, இச் சோழரின் ஒரு கிளை சிறப்புற்றிருந்தது. கி. பி. பதினாறாம் நூற்றாண்டு போலும் பிற்பட்ட காலத்திலும், வழிவழி வந்த காதுவழிச் செய்தியாம் கரிகாலன் வழிவந்தவர், பழைய பெருநகராம் உறையூரின் ஆட்சியாளர் என்ற பெருமையோடு, சோழர்குலப் படைத்தலைவர் சிலர், விஜய நகர அரசின் கீழ், மண்டலப் தலைவர்களாகப் பணிபுரியக் காணப்படுகின்றனர் (Ep. india Vol. XI Page ; 344) தெலுங்கு மக்களின் வரலாற்றுத் தொடக்காலத்தில், அத்தெலுங்கு மக்கள். சிந்தனை மீது, கரிகாலன் பொறித்துவிட்ட நல்லெண்ண முத்திரை, பெரும்பாலும், அனைத்துத் தெலுங்கு அரச இனங்களுமே, அவன் வழியில் வந்தவையாகவே உரிமை கொள்ளுமளவு, அத்துணைப் பெருமை வாய்ந்ததாம்.