பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 தமிழர் வரலாறு உரையாசிரியர், குளமும், குட்டையும் எனப் பொருள் கொண்டுள்ளார். ஆனால், மகளிர், புது வெள்ளம் வரும் போது, ஆற்றில் தான் குளித்தனரேயல்லது, குளத்திலும், குட்டையிலும் குளிக்கவில்லையாகவே, "வரைப்பகம்" என்ற தொடர், ஆறு கரைகட்டித் தடுக்கப்பட்ட இடம் எனும் பொருள் உடையதாகக் கொண்டு, அத்தொடரில், மேலே விவாதிக்கப்பட்ட உண்மைச் செய்தியின் குறிப்பீட்டினைக் கானும் கருத்துடையேன் நான்) முடத்தாமக் கண்ணியார், தம்முடய பொருநராற்றுப் படையின் கடைசிவரிகளில், "குனிந்துநின்று அரிவாளின் கூரிய வாயால், நெற்கதிர்களை அரிந்து, கதிர்க்கட்டுக்களை, மலைபோல அடுக்கி, நாள்தோறும் கடாவிட்டு, மேருமலை போல் குவிந்த நெல், நெருங்கி அடுக்கிய மூட்டைகள் இல்லாத வெற்றிடம் சிறிது இல்லையாம்படி, எங்கும் கிடப்பதற்குக் காரணமாம்படி, செந்நெல் விளையும் வரப்பு கட்டின ஒருவேலி பரப்புள்ள நிலம், ஒராயிரம் கலம் விளையுமாக" எனக் கூறியுள்ளார். "கூனிக் குயத்தின் வாய்நெல் லரிந்து, குடு கோடாகப் பிறக்கி, நாள்தோறும் குன்றெனக் குவைஇய, குன்றாக் குப்பை கடுந்தெற்று மூடையின் இடம்கெடக் கிடக்கும் சாலி நெல்லின் சிறைகொள் வேலி ஆயிரம் விளையுட் டாக". - பொருநராற்றுப்படை : 242 - 247. மிகப் பெரிய இவ்விளைவு, கரிகாலன், காவிரியின் வெள்ளத்தைத் திட்டமிட்டு முறைப்படுத்தியிருந்ததினாலேயே பெறப்பட்டிருக்க முடியும். எடுத்துக்காட்டுகளை எடுத் தாளும்போது, சில இடங்களில், பொருத்தமற்றனவற்றைக் காட்டிவிடும். திரு. வி. கனகசபைப்பிள்ளை அவர்கள், "காவிரியிலிருந்து பாசனத்திற்கான தண்ணிர் வழங்கக் கரிகாலன், மதகுகளையும், கால்வாய்களையும் கட்டினான் எனக்கூறி, (ஆயிரத்து எட்டு நூறு ஆண்டுகளுக்கு முந்திய தமிழர் : பக்கம் : 68) அதற்கு ஆதாரமாக, சிலப்பதிகாரம்,