பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் 245 காதை : 10, வரிகள் 108 - 111 ஐக் கொடுத்துள்ளார். அவர் குறிப்பிடும் அவ்வரிகள் "கடல் அலைகள் பொங்கி எழுவது அதிகமாகும் போது, காவிரியின் புதுவெள்ளம், அது கடலோடு கலக்கும் வாய்த்தலையிலிருந்து பின்னோக்கி எழத் தண்ணிர், பாசனக் கால்வாய்களுள். ஓயாது ஒலித்தவாறே உட்புகும்" என்ற பொருளைத் தான் தருகின்றனவேயல்லது, கரிகாலனின் பெருஞ்செயல் எதையும் குறிப்பிடவில்லை. "கடல் வளன் எதிரக், கயவாய் நெரிக்கும் காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை ஒவிறந்து ஒலிக்கும்." - சிலம்பு : 10 : 107 - 109. இத்தொடர்கள், அப்பாடல் பாடப்பெற்றபோது, அதாவது, கரிகாலன் காலத்துக்குச் சிறிது பிற்பட்ட காலத்தில், காவிரியிலிருந்து வெட்டப்பட்ட பாசனக் கால்வாய்கள் இருந்தன என்பதை மட்டுமே உறுதி செய்யும். திருவாளர் வி. எ. சிமித் அவர்கள், கரிகாலன் ஈழத்தின் மீது படையெடுத்துச் சென்று ஆயிரமாயிரம் கூலியாட் களைக் கொண்டுவந்து, காவிரி ஆற்றிற்குத் தான் கட்டிய நூறு மைல் நீளக் கரைகட்டும் பணியில் ஈடுபடுத்தினான். காவிரிப் பட்டினத்தைத் தோற்றுவித்தான் எனப் பழந்தமிழ்ப் புலவர்களால் கூறப்பட்டுள்ளார்" எனக் கூறியுள்ளார் (The Early History of India. 4th Edition. Page : 481) Guirtliftoffsscir ஒரு சிறு கூறு இது கரிகாலனின் ஈழப் படையெடுப்பு குறித்தோ, சிறை கொண்ட வீரர்களைக் கொணர்ந்தது குறித்தோ, பழந்தமிழ்ப் புலவர் எவரும் குறிப்பிடவில்லை. இவ்வறிவிப்புகள், மிகவும் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்த ஈழநாட்டுக் கற்பனைக் காலச் கணிப்புகளிலேயே (Ceylonese legendry chronicles) &fraori's LG&cărpoor. of gojloci)6Orridd), நூறுமைல் நீளக்கரை பற்றிய குறிப்பு எங்கும் காணப் படவில்லை. கரிகாலன் கட்டிய கரை, எத்துணைக் குறுகியது, எவ்வளவு நீண்டது என்பதைக் கண்டறிவது அறவே இயலாது. காவேரிப்பட்டினம் ஜாதகக் கதைகளில் குறிப் பிடப்பட்டுள்ளமையாலும், அக்கதைகள் எழுவதற்கு