பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 தமிழர் வரலாறு நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே, அது துறைமுகப் பட்டினமாக இருந்தது ஆதலால் அது, கரிகாலனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது; ஆகவே காவிரிப் பட்டினத்தைக் கரிகாலன் தோற்றுவிக்கவில்லை. - கரிகாலனும் திரிலோச்சன பல்லவனும் : தெலுங்குக் கல்வெட்டுக்கள், இப்பெரும்பணி, (காவிரிக்குக் கரை கட்டியது) கரிகாலன் ஆணைப்படி, தம் கண்களை, அவனுடைய தாமரைத்தாள் மீது வைக்கும் திரிலோசன னாலும், மற்றும் பிற அரசர்களாலும் செய்து முடிக்கப் பட்டது என்ற உண்மையான சான்றுகளைக் கொண்டுள்ளன. திரிலோசனன், திரிநேத்திரன், திருநயணன், முக்கண்டி, என்பவை பல்லவ என்ற பின் இணைப்போடு, தெலுங்குக் கல்வெட்டுகளில் பெருமளவில் காணப்படும், ஒரு பொருள்குறிக்கும் பல சொற்களாம். (Ep. Ind. Vol. XI P. 340). பல்லவர் வரலாறு, தனித்து உணரத்தக்க, மூன்று கால கட்டங்களாகப் பிரிக்கத் தக்கதாம். 1) காஞ்சியைத் தலைநகராகவும், கிருஷ்ணா ஆற்றங்கரையில் உள்ள தனகடகத்தை இரண்டாம் தலைநகராகவும், கொண்டு ஆண்ட வேதச் சடங்குகளைப் பேணி வளர்த்த, தங்கள் அரச ஆவணப்பட்டயங்களைப் பிராகிருத மொழியில் வெளியிட்ட, சமுத்திர குப்தனின் அலகாபாத் "ப்ரஸஸ்தி" (Prasast) யில், குறிப்பிடப்பட்டுள்ளவாறு, விஷ்ணுகோபன் என்பான் ஒருவன், ஆட்சி புரிந்திருந்த கி. பி. 350-இல், தங்கள் ஆட்சி அழிநிலைக்கு ஆளாக்கப்பட்டுவிட்ட பல்லவர் காலம், 2) தங்களுள் ஒருசிலர் வெறும் பெயரளவில் மட்டுமே காஞ்சித் தலைவர்களாக இருந்த, காஞ்சியில் அல்லாமல் கிழக்குக் கடற்கரைக்கண் உள்ள தெலுங்கு மாவட்டங் களிலிருந்து கொண்டு தங்கள் பட்டயங்களைச் சமஸ் கிருதத்தில் வெளியிட்ட கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த பல்லவர்கள், 3) மீண்டும் காஞ்சியிலிருந்து ஆட்சி புரிந்த, சமஸ்கிருதம் தமிழ் ஆகிய இரு மொழி களிலுமான பட்டயங்களைக் கொண்ட எண்ணற்ற கோயில் களைக் கட்டிய, கி. பி. 600க்கு முன்பே, தமிழர்களோடு