பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் 249 இவ்வாறு கூறுகிறார். “கடும்சினமும் பெருவலியும் வாய்ந்த பெரிய புகழ் வாய்ந்த கரிகாலன், போர் ஆரவாரம் மிக்க கள்வளம் வாய்ந்த வெண்ணிவாயில் என்ற இடத்தில், சிறப்பு வாய்ந்த பகையரசர்கள் படைகொண்டுவந்து போரிட்ட களத்தில், பேரொலி எழுப்பும் அவர்களின் வீரமுரசும் அழிய வேளிர் குலத்தலைவர்கள் பதினொருவருடன் இரண்டு பெருவேந்தர்களையும் அழித்தனன். "காய்சின மொய்ம்பின் பெரும்பெயர்க் கரிகால் ஆர்கலி நறவின் வெண்ணி வாயில் சீர்கெழு மன்னர் மறலிய ஞாட்பின் இமிழிசை முரசம் பொருகளத்து ஒழியப் பதினொரு வேளிரொடு வேந்தர் சாய". - அகம் : 246 : 8.12. வெண்ணிப் போர்க்களத்தில், இருபெருவேந்தர்களோடு குறுநிலத் தலைவர்கள் பதினொருவர் இருந்தது, கரிகால் சோழனின் சமகாலப் புலவர்களால் குறிப்பிடப்பட வில்லையாயினும் (அடிக்குறிப்பு:- பரணர் குறிப்பிடும் இவ்வெண்ணிப் போர், கரிகாலன் சமகாலப்புலவர்களால் குறிப்பிடப்படவில்லை என்பது தவறு. போர் நடந்த அவ்வெண்ணிவாயிலில், அப்போர்க்காட்சியைக் காணும் வாய்ப்பினைப் பெற்ற, அவ்வூர் குயவர் குலத்து வந்த பெண் பாற்புலவர், அப்போரில் வெற்றி கண்ட கரிகாலனினும், அவனால் பெற்ற புறப்புண்ணுக்கு நாணி வடக்கிருந்து உயிர்விட்ட சேரலாதனே நல்லன் எனக் கரிகாலன் கேட்கப் பாடிய பாட்டு ஒன்று புறநானூற்றில் (66) இடம்பெற்றுளது. அப்பாட்டை, இவ்வதிகாரத்தின் தொடக்கத்தில் எடுத்து ஆண்டு இருக்கும், திருவாளர் பி. டி. எஸ் அவர்கள் இங்கு இவ்வாறு கூறுவது ஏனோ? -மொழிபெயர்ப்பு ஆசிரியர்), அது காதுவழிச்செய்தியின் ஒரு சிறு உண்மைக்கூற்று ஆகும். கரிகாலன், தமிழ்நாட்டைத் தன் ஆட்சிக்கீழ்க் கொண்டுவந்த பெருநிகழ்ச்சிகளில், ஒரு சிறு நிகழ்ச்சியான, சேரநாட்டைச் சேர்ந்த வாகைப் போர்க்களத்து ஒருநாள் போரில், ஒன்பது