பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் 255 களோடும் திரும்பினான்; வங்க நஸிகனின் மகன் கஜபாகு, தன் தந்தையின் அரியணையில் அமர்ந்ததும், சிங்கள மக்களுக்கு இழைக்கப்பட்ட இழிவிற்குப் பழிவாங்கி விட்டான். நேல - யொத்ஹயன் (Nela Yodhaya) என்பான் படைத்தலைமையின் கீழ்ப் பெரிய படையோடு, ஆதம் பாலத்தின்மீது அணிவகுத்துச் சென்று, நாட்டைச் சூறையாடி, தஞ்சாவூர் அரசன், 12000 சிங்களவர்களைத் தரவும், அத்துடன் அதற்கு இருமடங்கு எண்ணிக்கையான தமிழர்களைச் சிறைக் கைதிகளாக, இலங்கைக்குக் கொண்டு செல்லத் தரவும், மறுத்தால் தஞ்சை மாநகரைத் தரைமட்டமாக்கித் தகர்த்துவிடுவதாக அச்சுறுத்தினான். அவ்வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கஜபாகுடு, போர்க் கைதிகளோடும், பண்டு கொண்டு செல்லப்பட்ட சிங்களவர்களோடும் மட்டுமல்லாமல், பத்தினிக் கடவுளின் காற்சிலம்பு, கஜபாகுவின் படை கொள்ளையடித்த, நான்கு தெய்வத் திருமேனிகளின் கைகளோடு கஜபாகு இலங்கை §Colbúlassrscăr". (Sketches of Ceylon's History Page : 26) upon வம்ஸம், இதைக் குறிப்பிடவே இல்லை என்ற உண்மையாலும், இது, பிற்காலத்திய, நம்புதற்கு இல்லாத கட்டுக்கதை என்பது உறுதி செய்யப்பட்டது. தஞ்சாவூர், சோழ அரசின் தலைநகராக, கி.பி. 850-இல் ஆயிற்று. இக்கட்டுக் கதை, அத்தேதிக்குப் பிறகே கட்டிவிடப்பட்டிருக்க வேண்டும். - - - மற்றொரு கருத்தும், ஈண்டுக் குறிப்பிடல் தகும். பெயர் குறிப்பிடப்படாத ஒரு சோழ அரசன், சிலப்பதிகாரத்தில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளான். ஐந்நூறு ஆண்டு களுக்கு முற்படாத காலத்தில் வாழ்ந்திருந்தவராகிய உரையாசிரியர் அடியார்க்கு நல்லார், உண்மைச் சான்றின் நிழல் ஒரு சிறிதும் இல்லாமல், இச்சோழனைக், கரிகாலனாகக் கொண்டுள்ளார். சிலப்பதிகார நிகழ்ச்சிகள், நடைபெற்றபோது, காவிரிப்பூம்பட்டினத்தில், ஆண்டு கொண்டிருந்த சோழனைப் பற்றிப் பேசும்போது, சிலப்பதிகாரம் பாடிய புலவன், இக்கரிகாலனைத்தான் ம:தில் கொண்டிருந்தார் என நம்மை நம்பத் துண்ட,