பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 தமிழர் வரலாறு நளனுடைய மகளாதலின், அவள், அது செய்ததில் வியப்பில்லை. (மகாபாரதம் : 3.14 : 24) நளனுடைய நண்பன் ருதுபர்ணன், தக்கண கோசலத்து அரசனாவன், விதர்ப்பம், அதை ஒட்டியுள்ள நாடு. ஆகவே, தக்கன பாதத்தின் ஒரு பகுதி. இராமர் காலத்திற்கு வெகு காலத்திற்கு முன்பே, ஆரிய அரசர்களால் கைப்பற்றப்பட்டது. இக்கால அளவில், முந்திய அதிகாரத்தில் விளக்கிக் கூறியவாறு, தமிழ் இந்திய மக்கள். அவரவர்க்குரிய திணை நிலங்களில் வாழ்க்கையை வளர்த்துக் கொண்டிருந்தனர்; வடஇந்திய மக்களோடு வாணிகம் செய்து வந்தனர். ஆனால், ஆரிய வர்த்தத்தின் தீவழிபாட்டு நாகரிகம், இக்காலத்தில், விந்தியமலைக்கு அப்பாலும், மெல்ல, மெல்ல நுழையலாயிற்று என்றாலும், வடவர்களால், தஸ்யூ நாகரிகம் என அழைக்கப்பட்ட தமிழர் நாகரிகம், அவ்வாரிய வர்த்தத் தீவழிபாட்டினால் அடிமை கொள்ளப்படவில்லை.