பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் - 26] அவற்றின் ஆட்சி வழக்கமாகிவிட்டது. முன்னவற்றில், ஆரியக் கருத்துகள் பற்றி, ஒரு சில குறிப்புகளே உள்ளன. அவையும், ஆரிய நாகரிகம், தமிழர் வாழ்வின் ஊடுறுவ வில்லை என்பதை உணர்த்திவிடும். சிலப்பதிகாரத்தில், விளக்கப்பட்டிருக்கும் வாழ்க்கை முறை, அதற்கு மாறாக, முழுக்க முழுக்க ஆரியக் கருத்துகளாலும், ஆரியச் சமயக் கொள்கையாலும் ஊடுறுவப்பட்டிருக்கும், அடிக்கொரு தரம் எனப் பரவலாகக் கூறப்பட்டிருக்கும், இசை, நாடகம், நாட்டியம், மற்றும் கற்பனைக் கதைகள் அனைத்துமே ஆரியத் தன்மை வாய்ந்தன. இலக்கியத் திறனாய்வுத் துறையில் ஒரளவே பயிற்சி பெற்றவரும் கூடப், சிலப்பதிகாரக் காப்பியம், தமிழர் சிந்தனைகள், ஆரிய நாகரிகத்தோடு கலப்பதற்கு இனி இடமில்லை எனக்க்றுமளவு இரண்டறக் கலந்துவிட்ட காலத்தைச் சேர்ந்தது. ஆனால், கரிகாலனைப் பற்றிய, அவன் காலப் பாடல்கள், தமிழ்நாடு ஆரியமயமாக் கப்படுவதற்கு முந்திய காலத்தைச் சேர்ந்தவை என்பதை எளிதில் உணர்ந்து கொள்ளத் தவறமாட்டார். கரிகாலன் காலம் : கஜபாகு சம காலத்தன் : மேலும், கஜபாகுவைச், செங்குட்டுவன் சம காலத் தேவனாகக் கொள்வது, மிகவும் வலுவற்ற அடிப்படை மீது அமைந்துளது. சிலப்பதிகாரக் கயவாகுவை, மகாவம்ச முதலாம் கஜபாகுவாகக் கொள்வது பற்றித் திருவாளர் ஹல்ட்ஸ் (Hawitsch) என்டார், "திரு. குமாரசாமி அவர்களின் மதிநலத்திற்கு மதிப்பளிக்கும் அதே நிலையில், இரண்டு கஜபாகுகளையும் அடையாளம் காட்டுவது, வெறும் பெயர் ஒற்றுமையால் மட்டுமே உறுதி செய்யப்படாமல், அகச்சான்றுகளாலும் உறுதி செய்யப்படும் வரையும், இலங்கையின் பண்டைய வரலாற்றுக் கால வரிசைப் பட்டியல், துண்ணிய திறனாய்வுக்கு உள்ளாக்கப்படும் வரையும் இக்கொள்கையை ஏற்றுக்கொள்ள முன்வர மாட்டேன்” எனக் கூறியுள்ளார்; (S.I.I. ill , l Page : 378). ஹல்ட்ஸ் அவர்களின் திறனாய்வு முடிவினைச் சந்திக்கத் திரு. கனகசபை அவர்கள் முயலவில்லை. திரு. எஸ். கிருஷ்ணசாமி