பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 தமிழர் வரலாறு "பொன்னிமயக் கோட்டுப் புலிபொறித்து மண் - ஆண்டான், மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்." ஈண்டு கூறப்பட்ட அப்பாட்டின் பகுதி, கரிகாலன் பெயரை ஈற்றில் கொண்ட சோழ அரசர் பட்டியலைக் கொடுக் கவில்லை; அது உள்வரி வாழ்த்து என்ற தலைப்பில் வரும் மூன்று பாக்களில், வறிதே இரண்டாவதாக இடம்பெற்ற ஒரு பாட்டு. இப்பாக்களில், இந்திரனுக்குரிய (ஒரு புராணக் கடவுள்) மாலையை அணிந்துகொண்ட பாண்டியன், இமயத்துப் பொன் முடியில் புலிச்சின்னம் பொறித்த சோழன், கடலிடையே நடப்பட்டிருந்த கடம்ப மரத்தை வெட்டி வீழ்த்திய சேரன், ஆகிய மூவரும், கடவுளாம் கிருஷ்ணனுக்கு ஒப்புடையவராகப் பாராட்டப் பெற்றுள் ளனர். செங்குட்டுவன் காலத்துக்கு முன் வாழ்ந்தவர்களாய, குறிப்பிடப்பட்ட அரசர்களின் மிகைப்படுத்தப்பட்ட பாராட்டினைக் கூறும், இச்சிறு பகுதி, எவ்வாறு, அவர்களை அச்செங்குட்டுவனின் சம காலத்தவராக ஆக்கும்? அது காண்பது அறவே இயலாது. 7) "21ஆம் காதை, 11 முதல் 15 வரையான வரிகள், கரிகாலன் மகள், அக்காலைச் சேர அரசனை மணந்திருந்தாள் எனத் தெளிவாக அறிவிக்கிறது. "மன்னன் கரிகால் வளவன் மகள், வஞ்சிக்கோன் தன்னைப் புனல் கொள்ளத் தான் புனலின் பின்சென்று கன்னவில் தோளாயோ என்னக் கடல் வந்து முன்நிறுத்திக் காட்ட அவனைத் தழிஇக் கொண்டு பொன்னங் கொடிபோலப் போதந்தாள்". கரிகாலனின் இச் சேரமாப்பிள்ளையின் பெயர் ஆட்டன் அத்தி என்பது ஆதலாலும், செங்குட்டுவனுக்கு அடுத்த முன்னோர், முறையே அவன் தந்தை சேரலாதனும், அவன் பாட்டன் உதயஞ்சேரலும் ஆவர் ஆதலாலும், ஆட்டன் அத்தி, ஆண்டிருந்தான், செங்குட்டுவனுக்கு நெடுங் காலத்துக்கு முன்னர் ஆண்டிருக்க வேண்டும். கூறிய