பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் 269 முன்பே, பத்தினிக் தேவிக்குத் தஞ்சாவூரில் கோயில் இருந்ததைக் குறிப்பாக உணர்த்துகிறது. பத்தினித் தெய்வவழிபாட்டின் தோற்றம் குறித்த பழங்கதைகள் நுண்ணிய திறனாய்வுக்குத் தாங்கமாட்டா அளவு, ஒன்றோடென்று பெரிதும் முரண்படுகின்றன. செங்குட்டுவனும், கஜபாகுவும் சமகாலத்தவர் என்பதைச் சிலப்பதிகாரத்திலிருந்து முடிவு செய்வதற்கு மற்றொரு தடையும் உளது. கஜபாகு சம காலத்தவன் என்ற வாதத்தின் அனைத்து முடிவிற்கும் அடிப்படையாய் அமைந்து, சிலப்பதிகாரத் தொடரில் இடம் பெற்றிருக்கும் கயவாகு என்ற சொல்லுக்கு வேறு ஒரு பாடபேதமும் உளது. அது, "கயவாகு" என்பதற்குப் பதிலாகக் "காவல்" என்பதாம். இரண்டனுள் எது சரியான பாடம் என்பதைக் கண்டறிய வழியில்லை. "காவல்" என்பதே சரியான பாடமாய்விடின், கஜபாகு சமகாலத்தவன் என்ற கூற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்ட மாளின்க அனைத்தும், தரைமட்ட மாகத் தகர்ந்துவிடும். அந்துப் பூச்சாலும், கரையான்களாலும் தின்னப்பட்டு, ஒடிந்து நொடுங்கிப்போன, பழைய தமிழ்ப்பனையோலைச் சுவடிகளைக் கண்டவர் எவரும், இப்பாட்டு, தலைமுறை தலைமுறை வழியாக, முந்தைய சுவடியிலிருந்து பார்த்துப் படி எடுத்து எழுதப்பட்டு வந்தது. அல்லது நினைவிலிருந்து எழுதப்பட்டு வந்தது என்பதை மறவாதவர் எவரும், ஐயப்பாட்டிற்குரிய அப்பாடபேதச் சொல்லுக்கு, அதைத் தென்னிந்திய வரலாற்றுக்கால வரிசைப் பட்டியலுக்கு உள்ள ஒரே ஒரு சான்றாக ஆக்குமளவு முக்கியத்துவம் அளிப்பதற்கு முன்னர், ஒரு முறைக்கு இருமுறை சிந்திக்கவே செய்வர். - - - பழங்காலம் தருவதற்கு வேறுபலத் தடைகள்: கரிகாலனுக்குப் கி. பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டை உரியதாக்குவது, வேறு காரணங்களாலும் மறுக்கப்படுகிறது. பெரிபுளுஸ் ஆசிரியரோ, அல்லது தாலமியோ, கரிகாலச் சோழப் பெருவேந்தனைவிடக்