பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 தமிழர் வரலாறு வீரசோழனின் செல்லூர்ச் செப்பேடுகளும், அவனைச் சாளுக்கிய இனத்து முதல் அரசன், விஜயரதித்தியனின் காலத்தவனாக ஆக்குகின்றன. தக்கினத்து அரசன், திரிலோசனன், தன் நாட்டின் மீது படையெடுத்து வந்த சாளுக்கியனை வென்று கொன்றான். அப்போது கரு வுற்றிருந்த சாளுக்கிய மன்னன் மனைவி, முடிவெழு (பெத்த முடியம்) வைச் சேர்ந்து, விஷ்ணுவர்த்தனன் எனப் பெயரிடப் பட்டான். அவன் வயதுக்கு வந்ததும், அவன் தந்தை தோல்வி கண்டவிடத்தில், தன் அரசை நிறுவினான். இக்கதை, திரி லோசனப் பல்லவன் காலத்தை அறிய, நமக்கு ஒரு குறிப் பினைத் தருகிறது. ஜம்மலமடுகு வட்டத்தில், பிறிதொரு கல்வெட்டில், திரிலோசனபுரம் என அழைக்கப்படுவதும், (350 of 1905) விஷ்ணுவர்த்தனின் பிறப்பிடமாகக் கூறப்படு வதுமாகிய, பெத்தமுடியன் என்ற அச்சிற்றுாரில், கன்னட மொழிக் கல்வெட்டு ஒன்று உளது (S.1046, See, M.E.R.19045. P:32-42).வெண்ணு பட்டனை (விஷ்ணுபட்டனை) சாளுக்கிய அரசிக்கு அடைக்கலம் தந்த சோமயாஜியாக, வெளிப்படத் தெரிந்த திரிலோசனப் பல்லவனிடமிருந்து நிலதானம் பெற்றவனாகக் காட்டுவதும், பிற்காலத்தைச் சேர்ந்ததுமான பிறிதொரு கல்வெட்டும் உளது (S. . . iv P. 927). - விஜயாதித்தியனின் படையெடுப்பும், திரிலோசனனுட னான போரும், கோணக் கல்வெட்டொன்றில், கூறப்பட்டும் உளது. (517) (Ep.indiv P.94,239). விஜயாதித்தியன், கீழைச் சாளுக்கிய முதல் அரசன் விஷ்ணுவர்த்தனனிலிருந்து, ஐந்து தலை முறைக்கு அப்பால் தள்ளப்படுகிறான். ஆகவே, அக்கதையில் ஏதேனும் உண்மை இருக்குமாயின், திரிலோசனன், கி. பி. ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்திருக்க வேண்டும் (End , P.3371899 ஆம் ஆண்டு 175 ஆம் எண் கல்வெட்டில்) ருத்ரபட்ட அஹிச்சத்ரன் என்பான் ஒருவன், திரிலோசனனிடம் பெற்ற நிலதானத்தால் பயனடைந்ததாகக் கூறப்பட்டுளது. நிலதானம் பெற்றவன் குடும்பத்தில், பெரிய அரச குலத்து உடன் பிறப்புகளாம் சத்யாஸ்ரயன், விஷ்ணுவர்த்தனன் ஆகியோரால், அது போலவே நிலதானம் பெற்ற சூரியனும், குப்பனும் பிறந்தனர்.