பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 - தமிழர் வரலாறு (Machenzie) அவர்களின் கையெழுத்துப் படிகளில் ஒன்று, இது குறித்த தனிக்கவனத்தை ஈர்க்கிறது. இவ்வரலாற்றுச் சான்றுகளின் பெருங்குவியலிலிருந்து, கரிகாலனும், திரிலோசனனும் சமகாலத்தவர் என்ற கருத்து, மக்களிடையே பதினோறாம் நூற்றாண்டில், மிகப் பெருமளவில் இடம் பெற்றுவிட்ட நம்பிக்கையாக இருந்தது எனக்கொள்ளலாம். பிற்காலக் கல்வெட்டுகளிலும், இல்க்கியங்களிலும், இடம் பெற்றிருக்கும் கதைகளில், திரிலோசனன், சோழர்க்குத் திறை செலுத்தும் சிற்றரசனாகக் காவிரிக்குக் கரை அமைக்கும் பணியில், அச் சோழர்க்குத் துணை புரிய மறுத்தவனாகக் காட்டப்பட்டுள்ளான். சம காலத்தவனான சோழப் பேரரசன் கையில், தன் தனியாட்சி உரிமையை அண்மையில் இழந்துவிட்டதனால், தன் பேரரசன் ஆணைக்கு அடிபணிய மறுக்கும் பெருமிதம் உடையவனாகி விட்டான் அடிப்பணி யாமைக்குத் தென்னாட்டுச் சோழர் தலைநகரிலிருந்து அவனைப் பிரித்து வைக்கும், நெடுந்தொலைவு காரணமா தலும் கூடும். எவ்வாறாயிலும், கரிகாலன் அவனை விட்டு வைக்கவில்லை. தன்னுடைய சிற்றரசனை விரைவில் தன்தாள் பணியச் செய்துவிட்டான் என்பதில் ஆவணங்கள் ஒத் துள்ளன. இலக்கிய மொழியில், உருவகப்படுத்திக் கூறின், தேவைக்குமேல் இருந்ததான கண், கரிகாலனால் பிடுங்கப்பட்டது. இக்கதைகளில் அடிப்படையில் அமைந்திருக்கும் கருத்துகளை நம்பித் திரிலோசனன், விஜயாதித்தியன், கரிகாலன் ஆகிய மூவரும் சம காலத்தவர் என்பதை நிலை நாட்டலாம்.