பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் 279 வஞ்சினமாலையில் வரும் இவ்வரிகளில், கணவன் கள்வன் அல்லன் என்பதைக் காவலன் முன் காட்டிவிட்டு வெளிப் போந்த கண்ணகி, "என் காதலனைக் கொன்ற கோன் நகர் இது. ஆகவே, இந்நகரை அழிப்பது தவறன்று அழிப்பேன்" எனக் கூறியவள், தான் பிறந்த புகார் நகரில் பிறந்து கற்பு நெறிகாத்த காரிகையர் எழுவரை நிரலே எடுத்துக்கூறி, "அவர்போல் யானும் ஒருபத்தினியேயாயின், அரசோடு மதுரையையும் அழிப்பேன்" எனக்கூறும் வஞ்சின உரையில், எடுத்துக் கூறிய அவ்வேழு பத்தினிப் பெண்டிருள் ஒருத்தியாக, புனல் விளையாட்டின் போது, வெள்ளம் அடித்துச் சென்றுவிட்ட கணவனாம் ஆட்டனத்தியைப் புனலோடு பின் சென்று கரைமீட்ட கற்பரசியாம் ஆதிமந்தியின் வரலாறு கூறும்போது, அவளை, "மன்னன் கரிகால் வளவன் மகள்" என அறிமுகப்படுத்தியுள்ளாள். அவ்வாறு அழைத்ததன் மூலம், அந்நிகழ்ச்சி சிலப்பதிகார திகழ்ச்சிக்குக், காலத்தால் முந்தியதே என்பதை உறுதி செய்துவிட்டாள். . . . ஆக, இம்மூன்று இடங்களிலும் கூறப்பட்ட திருமாவள வனோ, கரிகால் வளவனோ, சிலப்பதிகார நிகழ்ச்சி காலத்தவன் அல்லன் என்பதைத் தெளிவுபட உணர்த்தி விட்டார் சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகளார் என்பது உறுதிசெய்யப்பட்டது. முடிகெழுவேந்தர் மூவர்க்கு உரியதான பாட்டுடைச் செய்யுளாம் சிலப்பதிகாரத்தைப் பாடிய இளங்கோவடிகளார், தம் காப்பியத்துக் கருப்பொருளில் புகார் நகரத்து திகழ்ச்சிகளைப் பாடும்போது, அப்புகார் நகரைத் தலைநகராகக் கொண்ட ச்ோழப் பேரரசுக்கும் பெருமை சேர்த்தவன்கரிகாற் பெருவளத்தான் ஆதலாலும், அவன், தம் காலத்துக்குச் சிறிதே முற்பட்டவனாகவே அவனுடைய வாழ்க்கையொடு தொடர்பு கொண்ட அருஞ்செயல்கன், அவர் மனத்தில் பசுமையாகவே இருந்தாலும், அச்செயல்கள் சிலவற்றை ஏற்புடைய இடங்களில் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு குறிப்பிடும் நிலையில், அவன் இயற்பெயர் கூறாது.