பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் . . . . . . . 283 *. இந்திர விழா மேற்கொள்ளும் புகார் நகரத்து மக்களோடு கடற்கரைக்குச் சென்று, கானல்வரி பாடி மகிழுங்கால், பாட்டின் கருப்பொருளாக அமைந்துவிட்ட அகப்பொருள் காரணத்தால் கருத்து வேறுபாடுற்றுக் கோவலன், மாதவியை விடுத்துப் போய்விட, மாதவியும் தனித்தே தன் மனைபுகுந்த கொடுமையைப் பாடி முடித்த இளங்கோவடிகளார். இறுதியாகச் சோணாட்டு வேந்தன் வெண்குடைச் சிறப்பைப் பாடி வாழ்த்துங்கால், அக்காலை அரசாண்டிருந்த சோழ அரசனின் இயற்பெயர் கூறிப்பாராட்டாது, "செம்பியன்" எனச் சோழர் குலத்தவரைக் குறிக்கும் பொதுப் பெயரே கூறிப் பாராட்டியிருப்பது காண்க. "மாயிரும் ஞாலத்து அரசுதலை வணக்கும் சூழி யானைச் சுடர்வாள் செம்பியன் மாலை வெண்குடை கவிப்ப. - - ஆழி மால்வரை அகவையான் எனவே". - . . - கானல்வரி. அதேபோல், பாண்டிநாட்டு வேட்டுவர், தம் நிலத் தெய்வமாம் கொற்றவையை வழிபடப் பாடிய வரிப் பாட்டின் இறுதியில் தங்கள் நாடாளும் பாண்டியனை வாழ்த்துங்கால், பெயர்கூறி வாழ்த்தாது, பாண்டியர் குலத்தவர்க்கு உரிய மலையாம் பொதிகைமலை கூறி, அதற்கு உரியோன் என்ற தொடரால் குறிப்பிட்டு வாழ்த்தி இருப்பது காண்க. "பொறை உயர் பொதியில் பொருப்பன், பிறர் நாட்டு கட்சியும் கரந்தையும் பாழ்பட வெட்சி குடுக விறல்வெய்யோனே". . - வேட்டுவ வரி, . அதேபோல், மதுரை மாநகரத்து ஆயர்குல மகளிர், பால் உறையாமை போலும் உற்பாதத்தால், தங்கள் ஆயர்பாடியில் அடைக்கலம் புகுந்திருக்கும் கண்ணகிக்கும் கோவலனுக்கும் கேடு வராமை வேண்டி ஆடிய குரவைக் கூத்தின் இறுதியில், மன்னனை வாழ்த்தும் மரபையொட்டி மாநகரத்து மன்னனை 19